பக்கம்:பச்சைக்கனவு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 C லா. க. ராமாமிருதம்

என் தாப்பனாருக்கு வாசலில் யாராவது வயதான வர்கள் போனால், அவரை அறியாமலே அவர் கைகள் கூம்பும். 'என்னப்பா?' என்று கேட்டால் சொல்வார், "அம்மா இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு நிச்சயமில்ல்ை. காலமோ அல்பாயுசுக் காலமாயிருக்கிறது. இந்த நாளில் இத்தனை வயசு வரைக்கும் இருக்கிறதே, காலத்தையும் வயசையும் இவர்கள் ஜயம் கொண்ட மாதிரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்குகிறேன். அவர் வேணுமென்றே குரலைப் பணிவாய் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்கையில், ஏதோ ஒரு தினுசில் உருக்கமாயிருக்கும்.

ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? இந்தக் குடும்பத் திலேயே, ஆயுசுக்கும் ரணமாய், தீபாவளிக்குத் தீபாவளி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் திருஷ்டாந்தம் இல்லையா? நீங்கள் இப்போது நால்வராயிருப்பவர்கள், ஐவராயிருந்தவர்கள் தானே.

கடைசியில் எதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேனோ, அதுக்கே வந்து விட்டேன். நீங்கள் இல்லாமலே நடந்த தலை தீபாவளிக் கொண்டாட்டத் தைப் பற்றித்தான்.

அம்மாவைப் பார்த்தால் ஒரு சமயம் ப்ரமிப்பாய்த் தானிருக்கிறது. அந்த பாரி சரீரத்துடன் அவர் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றுகிறார், எவ்வளவு வேலை செய்கிறார், ஒய்ச்சல் ஒழிவில்லாமல்! சிறிசுகள் எங்களால் அவருக்குச் சரியாய்ச் சமாளிக்க முடியவில்லையே! மாடிக்குப் போய் அவர் மாமியாருக்குச் சிசுருவுை பண்ணிவிட்டு, மலம் முதற்கொண்டு எடுக்க வேண்டியிருக்கிறது- வேறொரு வரையும் பாட்டி பணிவிடைக்கு விடுவதில்லை- உங்கள் அப்பாவுக்குச் சிசுருவுை பண்ணி விட்டு...... அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகிறது! ஒரு புளியோ, மிளகாயோ, துளி சமையலில் தூக்கிவிட்டால், தாலத்தையும் சாமான்களையும் அப்படி அம்மானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/107&oldid=590765" இலிருந்து மீள்விக்கப்பட்டது