பக்கம்:பச்சைக்கனவு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் O 99

ஆடுகிறாரே! அவரைக் கண்டாலே மாட்டுப் பெண்களுக் கெல்லாம் நடுக்கம் அழகாயிருக்கிறார், வழித்த கழி மாதிரி, ஒல்லியாய், நிமிர்ந்த முதுகுடன்; இந்த வயசில் அவர் தலையில் அவ்வளவு அடர்த்தியாய்த் தும்பை மயிர்! கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவேயிருக்கின்றன. அம்மா சொல்கிறார்: ' என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ரிடையர் ஆனபிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் அமுல் பண்ணுகிறார். ஆபிஸில் பண்ணிப் பண்ணிப் பழக்கம்! இனிமேல் அவரையும் என்னையும் என்ன செய்கிறது? எங்களை இனிமேல் வளைக்கிற வயசா? வளைத்தால் அவர் 'டப்பென முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசனிக்காய் பொட் டென உடைஞ்சு போவேன். நாங்கள் இருக்கிற வரைக்கும் நீங்கள் எல்லாம் ஸ்ஹிச்சுண்டு போக வேண்டியதுதான். இந்த மாடியிலிருக்கிற கிழவியை வந்த இடத்துக்குச் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒண்ணு இருக்கு. அப்புறம்-’’

"ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசறேள்?' என்பார் மூத்த ஒர்ப்படி.

பின்னே என்ன, நாங்கள் இருந்துண்டேயிருந்தால், நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்போ இருக்கிறது?"

'இப்போ எங்களுக்கு என்னம்மா குறைச்சல்?' அம்மாவுக்கு உள்ளுறச் சந்தோஷந்தான். ஆனால் வெளிக் காண்பித்துக் கொள்ளமாட்டார். அது சரிதாண்டி, நீ எல்லோருக்கும் முன்னாலே வந்துாட்டே. பின்னாலே வந்தவாளுக்கெல்லாம் அப்படியிருக்குமோ? ஏன், என் பெண்ணையே எடுத்துக்கோயன்; அவளுக்குக் காலேஜ் குமாரியா விளங்கணும்னு ஆசையாயிருக்கு. இஷ்டப்படி வந்துண்டு போயிண்டு, உடம்பு தெரிய உடுத்திண்டு. நான் ஒருத்திதான் அதுக்கெல்லாம் குந்தக மாயிருக்கேன். அவள் பிறந்ததிலிருந்தே அப்பா உடன் பிறந்தமார் செல்லம். நான் வாயைப் பிளந்தேன்ாை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/108&oldid=590766" இலிருந்து மீள்விக்கப்பட்டது