பக்கம்:பச்சைக்கனவு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 0 லா. ச. ராமாமிருதம்

களின் நடுவில் தேங்கிய குளத்திற்கு அழைத்துச் சென்ற எத்தனையோ முறைகளும், பாதத்தினடியில் தெருவின் பொடி மண் பதிவதும், பச்சையாடை காற்றில் படபட" என்று அடித்துக்கொண்டு அவன்மேல் மோதுவதும் இப்பொழுது போலிருந்தது.

'நிலவு பச்சைதானே?"

பச்சையா? արrfr சொன்னா வெண்ணிலா கயில்லையோ?”

'முழு வெள்ளையா?”

'கண்ணாம்பு வெள்ளையென்று சொல்ல முடியுமா? ஒரு தினுசான வெண்பச்சை...' -

"ஆ, அப்படிச் சொல்லு..."

அது வேண்டுமானால் வெண்பச்சையாயிருக்கட்டும். ஆனால் அவன் அதை முழுப் பச்சையாய்ப் பாவிக்கச் சற்று இடங்கொடுத்தாலும் போதும்.

கசக்கிப் பிழிந்த இலைச்சாறுபோல், நிலவு குன்று களின் மீதும், புற்றரை மீதும், தாமரை வாவியின் மேலும் பச்சையோடு பச்சையாய் வழிவதாக நினைத்துக்கொள் வதில் ஒரு திருப்தி, அந் நினைவில் சற்று நேரம் திளைத்துக் கொண்டிருந்துவிட்டு, -

'வெய்யில் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டான்.

"ஐயையோ, இன்னிக்கு ஏன் ஒரு தினுசாயிருக்கேள்? .ெ வ ய் யி ல் வெளுப்பாய்த்தானிருக்கும். உள்ளே வாங்கோ...'

'முழு வெளுப்பா?’’

'முழுவெளுப்பு...'

ஆம், அவனுக்கு நினைவு தெரிந்தவரைகூட வெய்யில் வெளுப்புத்தான். அத்துடன் தகிப்பும்கூட. வெய்யிலும் பச்சையாயிருந்தால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/11&oldid=590665" இலிருந்து மீள்விக்கப்பட்டது