பக்கம்:பச்சைக்கனவு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 0 லா. ச. ராமாமிருதம்

மறுபடியும் குடும்பத்துள்ளேயே மறைத்துவிட்ட நானும் நீயின் ஒரு தோற்ற சாகவிதான் தீபாவளியோ? குடும்பமே நானு நீயாய்க் கண்டபின், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. தீபாவளிக்கு முதல் ராத்ரி. கூடத்து ஊஞ்சலில் புது வேண்டிகளும் புடவைகளும் சட்டைகளும் ரவிக்கைகளும் போராய்க் குவிந்திருப்பதைப் பார்த்ததும் ஏன் இத்தனை துணிகளை யும் தானே உடுத்திக்கொண்டு விட்டால் என்ன? பொம்மனாட்டி துணிகளை நானும் புருஷாள் துணிகளை யும், உங்களுக்காக நானே! நீங்கள்தான் இல்லையே. எல்லாமே இந்த விசுவரூப நானும் நீயுக்குந்தானே?

அம்மா ஒரு மரச் சீப்பில் கரும் பச்சையாய் ஒரு உருண்டையை ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தார்.

& می g-۹s 3 3 مسیر. 'குட்டி, சாப்பிட்டுட்டையா?” "ஆச்சு அம்மா." 'தின்ன வேண்டியதெல்லாம் தின்னாச்சா?'

'ஆச்சு- (அந்தக் கோதுமை அல்வாவில் ஒரு துண்டு வாங்கிட்டால் தேவலை. நான்தான் துண்டு போட்டேன். ஆனால் கேக்கறதுக்கு வெக்கமாயிருக்கே!)

'அப்படியானால் உக்காந்துக்கோ, மருதாணி யிடறேன்.”

அம்மா என் பாதங்களைத் தொட்டதும் எனக்கு உடல் பதறிப்போச்சு. "என்னம்மா பண்றேள்?’ அம்மா கையிலிடப் போறாராக்கும் என்று நினைத்துக்கொண் டிருந்தேன். ஆனால் என் பேச்சு அம்மாவுக்குக் காது கேட்கவில்லை என் பாதங்களை எங்கோ நினைவாய் வருடிக் கொண்டிருந்தார். வேலை செய்தும் பூப்போன்று மெத்திட்ட கைகள் எனக்கு இருப்பே கொள்ளவில்லை. அம்மா திடீரென்று என் பாதங்களைக் கெட்டியாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/113&oldid=590771" இலிருந்து மீள்விக்கப்பட்டது