பக்கம்:பச்சைக்கனவு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் O 109

தான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்து விட்டாலும் வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச் சென்று நினைக்கிறேன். வருடங்களின் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது.

பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மெளனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்ச பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல், குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்று. கிறது. இவர் இவரா, இதுவா? கோவிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும். இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்? கோவிலில் தான் என்ன இருக்கிறது?

-"ஐயோ ஐயோ-' என ரேழி அறையிலிருந்து ஒரு. கூக்குரல் கிளம்புகிறது. என்னவோ ஏதோ எனப் பதறிப் போய், எதிரோலமிட்டபடி எல்லோரும் குலுங்கக் குலுங்க. ஒடுகிறோம். வீல் என அழுதபடி குழந்தை அவன் பாட்டி மேல் வந்து விழுகிறான். 'என்னடா கண்ணே!' அம்மா அப்படியே வாரி அனைத்துக் கொண்டார். சேகர் எப்பவும் செல்லப் டேரன். இரண்டாமவரின் செல்வ: மில்லையா?

'பாட்டி பாட்டி!' பையன் ரோஸ்த்தில் இன்னமும் விக்கி விக்கி அழுகிறான். 'அம்மா அடி அடின்னு, அடிச்சூட்டா-'

'அடிப் பாவீ! நாளும் கிழமையுமாய் என்ன பண்ணிட்டாடா உன்னை: அம்மாவுக்கு உண்மையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/118&oldid=590776" இலிருந்து மீள்விக்கப்பட்டது