பக்கம்:பச்சைக்கனவு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக ரேகை C 117

வியாதிவக்கை கட்டி மேய்க்க பணக்காரனுக்குத்தான் சரி. அவன் வைத்திய செலவுதான் அவன் கெளரவத்தின் எடை. ஆனால் நம்மைப் போன்றவர்களைத் தேடித்தான் ராஜரோகம் வருகிறது, நம்

'என்னா அண்ணா யோசனை பண்ணுகிறாய்?"

குற்றஞ் செய்தவனைப்போல் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"ஒண்னுமில்லையப்பா, ஒண்ணுமில்லை. வியாதி யாய்ப் படுக்க வேணுமென்று ஆசைப்படாதே. நான் ஒருத்தன் இருக்கிறேனே போதாதா?”

'இல்லேண்ணா என்னை மன்னிச்சுடு அண்ணா!'

சின் கண்முன் என் கனவின் கருமேகம் எழுந்து, இருண்டு பரவிற்று. நான் அதனுள் புதைந்து போய்க் கொண்டிருந்தேன்.

“argin or smotrff, how do you feel?” argårgy Gállóē கொண்டே, என் கை நாடியைப் பிடித்தபடி டாக்டர் கட்டி லோரத்தில் உட்கார்ந்தார்.

‘என்னைக் கேட்பானேன், உங்களுக்குத் தெரியாதா?

'எனக்குத் தெரிகிறதிருக்கட்டும், உங்களுக்கெப்படித் தோன்றுகிறது? தேவலையாய்ப்பட்டால் சி கி ச் ைச முறையாய் இருக்கிறதென்று தெரியும். செளகர்யமாய் இல்லையானால், மருந்தையோ, சிகிச்சையோ மாற்றுவது பற்றி யோசிக்கலாம்."

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

‘என்ன டாக்டர், சின்னக் குழந்தைக்கு வாழைப்பழம் கோடுத்து ஏமாற்றுகிறீர்களா? நானும் இங்கு வந்து ஒரு வருஷமாய்க் கிடக்கிறேன். வந்தது முதற்கொண்டு நீங்கள் தான் பார்க்கிறீர்கள். இதுவரை ஐந்து ஆபரேஷன்கள் செய்தும், நீங்கள் என் சதையை அறுத்து அறுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/126&oldid=590784" இலிருந்து மீள்விக்கப்பட்டது