பக்கம்:பச்சைக்கனவு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 C லா. ச. ராமாமிருதம்

எறிந்தும் என் உடல் ரத்தமெல்லாம் இன்னமும் சீழாய்த் தான் மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் ஆறாவது ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். என்னை உடம்பு எப்படி என்று கேட்கிறீர்கள்!'

அவர் முகம் சுண்டிற்று. "இப்படி நம்பிக்கையை இழந்து பேசினால் என்ன செய்கிறது? உடம்பு குணமாக வேண்டாம் என்றா இத்தனை ஆஸ்பத்திரி கட்டி வைத்திருக்கிறார்கள்? வைத்யத்திற்கு நாங்கள் எல்லாம் படிக்கிறோம்? இன்னும் பரிசீலனை செய்கிறோம்? புதுப் புது மருந்துகள், சிகிச்சைகள் கண்டு பிடிக்கிறோம்?

எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. சாய்ந்திருந்தவன், நான் எழுந்து உட்காந்தது கூட எனக்கு நினைப்பில்லை.

'என்னைக் கேட்காதேயும், நீங்கள் புகழ்ந்து மகிழும் ஆஸ்பத்திரியை ஒட்டினாப்போல் கட்யடிசவக் கிடங்கில், பனிக்கட்டி பரப்பி, அடுக்கடுக்காய் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை, துப்பட்டியில் சுருட்டி, சேர்த்து இறுகக்கட்டி சேமித்து வைத்திருக்கும் உங்கள் சொத்துக் களை ஒவ்வொன்றாய்ப் புரட்டி முகத்தை மூடியிருக்கும் துணியை விலக்கி அவைகளைக் கேளுங்கள்: 'உங்களுக் காகத்தானே நாங்கள் ஆஸ்பத்திரி கட்டிவைத்திருக் கிறோம்? உங்களுக்காகத்தானே வைத்ய பரிசீலனை செய்கிறோம், புதுப்புது மருந்துகள், சிகிச்சைகள் கண்டு பிடிக்கிறோம்? அவை வாய் திறந்து பதில் சொல்லா விட்டாலும் சாகுந்தறுவாயில் விதவிதமான விகாரங்களில் நிலை குத்திப்போன அவைகளின் விழிகளில் நீங்கள் படிக்கும் சேதியை மறவாமல் என்னிடம் வந்து சொல் லும்...... புக்புக்- லொக்கு லொக்கு.”

இரும ஆரம்பித்துவிட்டது.

3.

"Damm- என்று மொணமொணத்துக் கொண்டே டாக்டர் எழுந்து போய்விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/127&oldid=590785" இலிருந்து மீள்விக்கப்பட்டது