பக்கம்:பச்சைக்கனவு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக ரேகை C 11:9

எனக்குக் களையிட்டுவிட்டது. தலையணையில் சாய்ந்தேன். வேர்வை ஜலகண்டமாய்க் கொட்டிற்று. நான் அவைகளுடன் போய்ச்சேர இன்னமும் எத்தனை நாளாகும்? எப்போது அது நேரும் ஒருவரும் பக்கத்தில் இல்லாத வேளையிலா? நள்ளிரவிலா? நைட் நர்ஸ் மேஜை மேல் துரங்கிவிழுகையிலா? பட்டப்பகலில் அத்தனை பேரும் பக்கத்திலிருக்க ஆபரேஷன் டேபிளிலேயா? கொடுத்த மயக்கத்திலிருந்து தெளியாமலேயா? (எண்ணுங்கள் மிஸ்டர்- ஒண்னு ரெண்டு மூணு ஆஞ்சு...... அறுபத்தி அஞ்சு, நூற்றி...... நூற்றி......')

மார்வாடித் திண்டுபோல், உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை சுருட்டி, மூடி, தைத்து, தலைப்பக்கம் முடிச்சில் மிஞ்சிய துணி குடுமிபோல் விசிறிக்கொண்டு, உள்ளே நான் முழு நினைவுடன், குற்றுயிராய்

"எப்படியிருக்குடா?' டாக்டரிடம் எரிந்து விழுந்தாற் போல் இவளிடம் விழ முடியுமா?

அம்மாவை நினைத்தால்தான், நினைக்கப்படவில்லை. நெஞ்சு இடிகிறது. அம்மா இன்னும்பட உன் தலையில் இன்னும் என்ன எழுதி வைத்திருக்கிறது?

'இந்தா, முன்னைக்கு முன்னால் இந்த வேப்பம்பூ பச்சடியைத் தொட்டு நாக்கில் வெச்சுக்கோ, யமனுக்கு வேம்பாய் இருப்பாய்-'

அம்மா, அடுத்த வருஷப் பிறப்புக்கு நான் ஆஸ்பத்திரி யில் இருக்கமாட்டேன். வீட்டிலும் இருக்கமாட்டேன்.

ஆனால் விட்டு உன்னிடம் சொல்ல எனக்குத் துணிவு இல்லையே! அம்மா, உன் அபார நம்பிக்கையும், நம்பிக்கை யில் இருக்கும் நம்பிக்கையும் என்னை உன்னிடம் கோழையாக்குகிறது. உன்னை ஏமாற்ற என்னை ஏமாற்றிக் கொள்கிறேன். எனக்கு ஒசையடங்கி, உணர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/128&oldid=590786" இலிருந்து மீள்விக்கப்பட்டது