பக்கம்:பச்சைக்கனவு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 C லா. ச. ராமாமிருதம்

ஒய்ந்து, மூச்சு முரடி, முரடு நூலாகி, நூல் இழையாகி, இழையடங்கிக் கொண்டிருக்கும்போது கூட, நான் இறந்து போய்க் கொண்டிருக்கிறேன் என்றால் நம்பமாட்டாள். கையைப் பிசைந்துகொண்டு, 'டாக்டர், என் குழந்தையை எனக்குக் காப்பாற்றிக் கொடுங்களேன்! மருந்தை மாற்றுங் களேன்- அநுமாரே! அன்னிக்கு சஞ்சீவி மருந்து கொண்டு வந்து படையையே உயிர் மீட்டையே, என் குழந்தையை எனக்குத் திருப்பிக்கொடேன்!” என்று, அலறுவாள்.

அவள் நினைவில் எனக்கு அழிவில்லை. பெற்ற வயிறின் பலம் அப்படி. செத்த பின்னும் அங்கு நான் சூளையிருப்பேன். அவள் என்னை எண்ணும் போதெல் லாம், ஒவ்வொரு தடவையும், அவள் வயிற்றில் ஒரு வண்டி நெருப்பை வாரியிறைத்துக் கொண்டே, அதன் தகிப்பில், கணகணவென்று ஜ்வலித்துக் கொண்டு கிளம்புவேன். நான் அமரத்வம் அடையும் முறையே இப்படித்தான்.

ஐயோ!

" தோ பார், உன் கேள்வியை நான் முந்திக்கிறேன், உடம்பு எப்படி என்று என்னைக் கேட்காதே. இன்றைக்கு இந்தக் கேள்வியே எனக்கு எரிச்சல் உண்டு பண்ணுகிறது."

திகைப்புற்ற அவ்விழிகளில் பயம் எட்டிப் பார்த்தது. அவளைக் கண்டு என் மனம் தவித்தது.

"என்னை மன்னித்துவிடு.'

அவள் உதடுகள் நடுங்கின. அவள் கை என் மணிக்கட்டைப் பற்றியது.

"ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? யார் யாருக்கு மன்னிப்பு?”

'இல்லை, என்னை மன்னித்துவிடு'

'மறுபடியும் பாரேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/129&oldid=590787" இலிருந்து மீள்விக்கப்பட்டது