பக்கம்:பச்சைக்கனவு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேக ரேகை C 121

'இல்லை, தப்பெல்லாம் என்னுடையதுதான். உன் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன்."

"ஐயோ இம்மாதிரியெல்லாம் என்னை ஒண்னும் சொல்லாதேயுங்களேன்! வேனுமானால் என்னைக் கோபியுங்கள், ஆனால் என்னை மன்னிப்புக் கேட்காதே யுங்கள்-

அவள் கண்களில் கண்ணிர் மாலையாய்ப் பெருக்கெடுத்தது. அவள் அப்படி அழுகையில், அப்படி அழவிடுவதில் எனக்கு எங்கேயோ ஒரு ஆறுதல்கூட உணர்கிறேன். எனக்காக ஒருத்தி அழுகிறாள். நாளடைவில் இவ்வழுகை மறைந்து விடும்; மறந்தும் போய்விடும். 'பாவி, என் தலையில் கல்லைப் போட்டு விட்டுப் போனானே' என்ற சீற்றம்கூட வரும். ஆனால் இன்று ஒருத்தி எனக்காக அழுகிறாள். அன்று இவள் முகம் கண்ணிரில் நனையக் காண்கையில் எனக்கு அமைதிகூட உண்டாகிறது.

ஒன்றரை வருஷங்களுக்கு முன்னால் எவ்வளவு அழகா யிருந்தாள்! இப்பவும்தான் என்ன குறைவு! ஆனால் இன்னமும் இளமையாயிருந்தாள்.

'நீ அழுவதில் என்ன லாபம் சொல் நடக்கப் போவதை எவராலும் தவிர்க்க ஆகாது. நான் நேற்று ஒரு கனவு கண்டேன். உடனே நீ கண்டதாய்ச் சொன்ன கனவும் ஞாபகம் வந்தது.”

அவள் கீழுதடு பிதுங்கிற்று. 'ஒரு கனவுதானா? எத்தனையோ கனவுகள்!'

நான் படுக்க ஒரு மாதத்திற்கு முன் அக்கனவை எனக்குச் சொன்னாய். அன்றிரவு நாமிருவரும் ரொம்பவும் சந்தோஷமாயிருந்தோம். திடீரென:

'என்ன யோசனை பண்ணுகிறீர்கள்?’ என்று கேட்டாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/130&oldid=590788" இலிருந்து மீள்விக்கப்பட்டது