பக்கம்:பச்சைக்கனவு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 0 லா. க. ராமாமிருதம்

'நான் உன்னை இறுகத் தழுவிக்கொண்டிருக்கிறேன். நீ என்னை அணைத்துக் கொண்டிருக்கிறாய். இருவர் மனமும் நிரம்பிய இந்த உடல் நிலையிலேயே சாவு சித்தித்தால் அதைவிடப் பதவி உண்டோ?' என்றேன்.

உன் உடல் என் அணைப்புள் குலுங்கிற்று. என் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு விக்கிவிக்கி அழுதாய்.

நீ தேம்பினாய்:

'இன்று பகல் கண்ணயர்ந்து போய் ஒரு கனாக் கண்டேன். நான் ஏதோ ஒரு தோட்டத்தில் ஒரு மேடை மேலிருக்கிறேன். மாலை ஒன்று தொடுத்துக்கொண்டிருக் கிறேன். ரொம்பவும் ஆசையாய்த் தொடுக்கிறேன், சுறுசுறுப்பாய் தனி உயிர் பெற்றாற்போல் அது என் கைகளினிடையில் உருவாவது காண அலுப்பற்ற வியப்பா யிருக்கிறது. நீங்கள் என்னெதிரில் வருகிறீர்கள். உங்கள் கழுத்தில் ஆசையாய் மாலையைப் போடுகிறேன். போட்டதுதான் தாமதம், உடனே பிணமாய்த் துவண்டு நீங்கள் என் மடியில் விழுகிறீர்கள்...... அதுமுதல் மனசே சரியாயில்லை...'

அட அசடே, அப்படியானால் நான் சிரஞ்சீவி தான்!” என்று உன்னை நான் தேற்றினேன், ஞாபக மிருக்கிறதா?”

அவள் முகம் அவள் கைகளில் புதைந்திருந்தது. தோள்கள் குலுங்கின.

நேரமாகிவிட்டது. விளக்குகள் அவிந்தாகிவிட்டன. தாழ்வாரத்தில் மாத்திரம் ஒன்று எரிகிறது. எனக்கு அரைத் துாக்கத்தில் (தூக்கமா மயக்கமா) கண்கள் சொருகின. ஏதேதோ நினைவுகள் பொருந்தி பொருந்தி எடுக்கும் படங்களாய் மாறுகின்றன.

சின்ன வயதில் என் தம்பியும் நானும் ஒரே பாயில் கட்டிப் புரண்டது. அவனுக்குக் குளிருமோ எனும் பரிவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/131&oldid=590789" இலிருந்து மீள்விக்கப்பட்டது