பக்கம்:பச்சைக்கனவு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக ரேகை C 123

இழுத்து இழுத்துப் போர்த்தப் போர்த்த, தூக்கத்தில் அவன் உதறி உதறி எறிகிறான்.

நான் எஸ். எஸ். எல். சி.தேறின தற்கு, அம்மா கொழுக் கட்டை போடுகிறாள். அவள் விரல்களின் துடிப்பின் கீழ் மாவுச் சொப்புகள், பூரணத்தை ஏந்துவதற்காக என்ன வேகமாய், பூக்கிண்ணங்கள் போல தவிதவிக்கின்றன! பார்க்கவே ஆசையாயிருக்கிறது. நானும் ஒன்றேனும் செய்யப் பார்க்கிறேன். ஆனால் மாவுதான் அழுக்காகி வீணாகிறது.

பாவம்! அடுத்தாற்போல் மேல்படிப்புக்கு அடுத்த, கப்பலில் நான் சீமைக்குப் பயணமாவதாய்த்தான் அம்மாவுக்குத் தியானம், தடபுடல்.

காக மாறுகிறது. கலியாணமாகிய புதுத் தம்பதிகள், இன்னும் கழற்றாத மாலையுடன், வண்டிவிட்டிறங்கி வீடு நுழைந்ததுமே அம்மாவை நமஸ்கரிக்கிறோம். அம்மா மருமகளை ஆசீர் வதிக்கிறாள். "பதினாறும்பெற்று, தோளோடு தாலி தொங்கத்தொங்கக் கட்டிண்டு தீர்க்காயுசாயிரு'

ஆபீஸிலிருந்து வருகிறேன். என் சின்னத் தங்கை ஓடிவந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு அண்ணா, நேக்கு சாக்கலேட் வாங்கிண்டு வந்தையோ?” என்கிறாள்.

திடீரென்று ஒரு சபலம் உதிக்கிறது. ஒரு வேளைநான் மேகத்தில் புதைந்து கொண்டிருக்கையிலேயே அதைச் சுற்றிக்கட்டிய வெள்ளிரேகை நினைவு வந்தது.

நான் ஒருவேளை, மறுபடியும்-துரய பொன்னிறத்துடன் பிறந்து கொண்டிருக்கும் உதய சூரியனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/132&oldid=590790" இலிருந்து மீள்விக்கப்பட்டது