பக்கம்:பச்சைக்கனவு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 0 லா. ச. ராமாமிருதம்

அந்த மாதிரி ஒரு நம்பிக்கையிலேதான் இந்த ஊர் ஆதியிலே உருவாச்சுன்னு சொல்லனும். வேறே எந்த எண்ணத்தை, மனசிலே வெச்சுக்கிட்டு ஆதியிலே இங்கே குடியேறின நாலுபேரோ, அஞ்சு பேரோ குடிசை கட்டினாங்கன்னு சொல்ல முடியும்? எனக்கு நெனைப்புத் தெரிஞ்சதிலிருந்தே, இந்த இடம் எல்லாத்துக்கும் ஒதுக்கு மாசாமர்சம் எட்டு மைலுக்கு அப்பாலே ஒரு சந்தை கூடுதே அதுலேதான் உப்பிலேருந்து கற்பூரம் வரை எல்லாம் வாங்கியாவணும். அப்படியும் எனக்கு நெனப்பு வயசு வரவேளைக்கு, அதிலே முளைச்ச நாலு வீடு நாற்பது வீடா வளர்ந்திருந்தது. வெறும் நம்பிக்கை வளத்து மேலே.

அந்த சமயத்திலே பேட்டைக்கு ஒரு ஆண்பிள்ளை யும் பெண்பிள்ளையும் குடியேற வந்தாங்க. புருசன் பெண்சாதின்னு நான் சொல்லமாட்டேன். பொம்புள்ளே களுத்துலே தாலியில்லே. முதுகிலே ஒரு மூட்டை, இடுப்பிலே கொளந்தை, அப்படித்தான் வந்தா. அவன் சக்கரத்தை உருட்டிக்கிட்டு வந்தான். அதோ பாருங்கமேட்டுலே கூரை உள்ளுக்கு விளுந்து போயிருக்குதே, அந்தக் குடிசைதான் அவுங்களது. அங்கே வாசல்லே ஒரு பள்ளமிருக்குதே, அங்கே ஒரு முருங்க மரமிருந்தது. கொம்புலே புடவையை ஏணை கட்டி அதிலே கொளந்தையை வளத்து மண் பிசைஞ்சா, அவனே செவுரெளுப்பி, ஒலை முடைஞ்சு கூரை போட்டான். அப்புறம் வாசல்லே சக்கரத்தைப் போட்டான். குச வேலை செய்ய ஆரம்பிச்சான்.

நான் ஒரு விசயம் ஒப்புக்கணுங்க. நம்ப ஊரிலே அளகான வங்க ஒருத்தருமேயில்லை. அ ள கு க் கு ம் அலங்காரத்துக்கும் நேரமில்லே, வசதியில்லே, அப்படியே அளகு பண்ணிக்கிட்டாலும் பாக்கறத்துக்கு கண் இல்லே. இருந்தாலும் அவன் அவள், அவங்க கொளந்தை (isoggi பேரையும் போல அவ்வளவு அவலச்சணம் ஒருத்தரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/135&oldid=590793" இலிருந்து மீள்விக்கப்பட்டது