பக்கம்:பச்சைக்கனவு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் ) 127

நான் பார்த்ததில்லே. யாரையாவது ஏசிப்பேசினா அவன் என்ன கொம்பிலே ஏறிக் குதிச்சானான்னு கேக்கற பளக்கம். இவங்களைப் பார்த்தா கொம்பிலேறிக் குதிச்சவங்க மாதிரிதான் இருந்தது. நான் சொல்றது புரியுதுங்களா அதான், சிரிக்கிறீங்களே, புரிஞ்சுக்கிட்டிங் களா?

அவளுக்கு வாய்கொள்ளாமே பல் வெளியிலே துருத்திக்கிட்டு அதிலே ரத்தம் மாதிரி புகையிலைக் காவி. கண் நானும் இருக்கேன்னு சும்மா கீறினாப் போல. தலைமயிர் சடை போட்டிருக்கும். மூக்குன்னு மூச்சுவிட ரெண்டு தொண்டிதான். இவ இப்படின்னா, அவனுக்கு அவள் ரம்பைன்னுதான் அவன் இருந்தான். இருந்த உதடு அறுந்து தொப்புள் வரைக்கும் தொங்கிச்சு. அப்பிடின்னா அப்படியா? அவ்வளவு மோசம்னு நீங்களே நெனைச்சுப் பார்த்துக்கங்க. அத்தொடு கன்னத்திலே நீளமா, அசிங்கமா ஒரு வெட்டுத் தளும்பு வேறே.

மிருகங்கள்.

அவங்க சுபாவமும் அப்படித்தான் காட்டிலேயிருந்து பிடுங்கினமாதிரிதானிருந்தது. ஒரே முரட்டுத்தனம். ஒரு நாள் அந்த வழியாப் போனேன். ரெண்டு பேரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் என்னவோ பேசிட்டு இருந்தாங்க. அவன் மண்ணைச் சக்கரத்திலே கட்டிட்டு, சக்கரத்தை சுத்திக் கிட்டிருந்தான். திடீர்னு ஒரே பாய்ச்சல் பாய்ஞ்சு பூமியிலிருந்து ரெண்டு காலும் எளும்பி, பறக்கற மாதிரி ஒரு பாய்ச்சல் பாஞ்சு புறங்கையை வீசி அவ வாயிலே அடிச்சான் பாருங்க. நான் அலண்டு போயிட்டேனுங்க! உங்க வீட்டு அடியா. எங்க வீட்டு அடியா, மனுசன் தாங்கற அடியா அது செம்மட்டி அடி அது. அவ உதட்டிலே ரத்தம் அப்படியே பிடுங்கிக் கிட்டுது.

என்னைப் பார்த்துட்டா. அவ புருசன் அடிச்சது கூட தெரியல்லே. நான் பார்த்ததுதான் பொத்துக்கிட்டுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/136&oldid=590794" இலிருந்து மீள்விக்கப்பட்டது