பக்கம்:பச்சைக்கனவு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சைக் கனவு O 5

அகன்ற மனதில் கிளர்ந்த ஆசை, வெளியும் வர இயலாது உள்ளும் அடங்க இயலாது, முண்டிய மார்பு இது. பச்சை மேலாக்கினடியில் பட்டுப்போன்ற வயிறு இது.

அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தை யும் ஒரே மூச்சில் அளந்துவிட முயலுவதுபோன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது...

'பச்சைக்குழந்தை? பச்சைக்குழந்தை!!...' அவன் மனைவி அவன் கையைக் கரகரவென்று பிடித்திழுத்து, கூடத்து ஊஞ்சலில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். அப்படியே அவள் மெதுவாய்ப் படுக்கையாய்ச் சாய்ந்து, அவனை உட்கார வைத்த அதிர்ச்சியில் ஆடும் ஊஞ்சலுடன் மனதையும் அசைய விட்டுக்கொண்டு, பச்சையைப் பற்றி எடுத்த எண்ணத் தைத் தொடர முயன்றான்.

அவன் கண்ணிருக்கையில் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் அவனுக்குப் பிடித்த வர்ணமாய், மனதைக் கெட்டியாய்ப் பற்றிக் கொண்டுவிட்டது. அக்குன்றுகளிடையில் குளக்கரையில் அவன் பச்சையைப் பெற்று பார்வையையிழந்ததை நினைத்தான். அப்பொழுது என்ன வயதிருக்கும்? பத்திருக்குமா? அவ்வளவுதான்.

மல்லாந்து படுத்தவண்ணம் சூரியனைச் சற்றுநேரம் நோக்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு சுற்றும் முற்றும் இருப்பதைப் பச்சையாய்க் காணக் காண அவனுக்கு வியப்பாயிருக்கும். சூரியஜோதியில் கண்ணைத் திறந்து காண்பித்துவிட்டு புத்தகத்தை எடுத்துப் பிரித்தால் எழுத்துக்கள் பச்சை பச்சையாய்க் குதிக்கும். பொடி.மணல் பச்சைப் பளீரடிக்கும். அது அப்பொழுது அவனுக்கு ஆனந்தமாயிருந்தது. யா ரு ம றி யா ஒரு 与岛 விளையாட்டைத் தான் கண்டுபிடித்ததாய் நினைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/14&oldid=590669" இலிருந்து மீள்விக்கப்பட்டது