பக்கம்:பச்சைக்கனவு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் C 131

மண்ணை காலும் கையும் நோவப் பொறுக்கி பிசைஞ்சு பதமா மிதிக்கணும். பானை பண்ணறதுன்னா லேசா? சக்கரத்திலேற விண்டு போறது எத்தனை? அப்புறம் அதை அடி மூட ஒரு தடவை பலகையாலே தட்டிக் கொட்டி அப்புறம் உருவாக்கறத்துக்கு மூணு தடவை தட்டி, வெய்யிலிலே காயவெச்சா, வெடிச்சுப் போறது எத்தினி, சூளையிலே உடைஞ்சு போறது எத்தினி! அது வாங்கற வேலைக்கு விக்கற விலை போதாதுங்க. மண்ணு தானேன்னு சொல்லுவாங்க. அப்படின்னா அப்புறம் எல்லாம் மண்தான், நான் மண், நீங்க மண், எல்லாமே மண்தான்.

மார்களி மாதம் விடியற்காலை, பல்லு கிட்டற குளுருலே எளுந்து பானையை லொட்டு லொட்டுன்னு தட்டற ஒரொரு தட்டும் பொங்கல் கிட்டக் கிட்ட வந்துட்டுதுன்னு, படுத்துட்டு இருக்கிறவங்க காதண்டை வந்து சொல்லுறாப் போலே இருக்கும்.

நம்ம பண்டிகையிலே பொங்கல்தானுங்க ஏளைக்கும் ரொம்ப வேண்டிய பண்டிகை. மத்ததெல்லாம் பணக்காரன் பண்டிகை. எந்த ஏளை ஆட்டிலும் பொங்கல் மாத்திரம் புதுப்பானையிலே பொங்கியாவணுங்க. நாங்களெல்லாம் ஏளைங்க.

நடுவூட்லே அடுப்பு வெட்டி, பொங்கல் பொங்கி, இலையிலே பொங்கலை வெச்சு நடுவுலே குழிச்சு பாலை வார்த்து, சூரியனுக்குக் காட்டி, பொங்கலோ! பொங்கல்!'ன்னு கூவுவோம். வளி பிறக்குதோயில்லியோ தை பிறக்குதுங்க. அத்தோடு நல்ல வளிக்கு ஒரு நம்பிக்கை யும் பிறக்குதுங்க.

இந்த ஒரு எண்ணத்திலே மாத்திரம் பேட்டையிலே இருக்கிறவங்க அத்தனை பேருக்கும் ஒத்துமைதான். தினப் படிக்கு வெங்கலத்திலே சோறு வேவற நாட்டாமைக்கார் ஆட்டிலே கூட பொங்கச்சோறு புதுப் பானையிலேதான் வேவும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/140&oldid=590798" இலிருந்து மீள்விக்கப்பட்டது