பக்கம்:பச்சைக்கனவு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 0 லா. ச. ராமாமிருதம்

நாளைக்குப் பொங்கலுன்னா இன்னி சாயங்காலந் தான் பானை வாங்குவாங்க; பொங்கலன்னிக்கே புதுப் பானை வாங்கறவங்களும் இருக்காங்க. புதுவாழ்வுங்க, மார்களி சந்தைக்கு பேட்டையிலே ஒருத்தருமே இந்தத் தடவை பானை வாங்கப் போவல்லே. இந்தத் தடவை சந்தைப் பானையில்லே, நம் சொந்தப் பானை. அதுவே எவ்வளவு சந்தோஷம் தெரியுங்களா?

நான் படிச்சவன் இல்லிங்க, இருந்தாலும் நம்ம பேட்டை, நம்ம ஊர், நம் நாடு நம்ம தேசம், எல்லாம். ஒண்ணுதானுங்களே!

புதுப்பானை வாங்கப் போறதே பேட்டைப் பொம் புள்ளேங்களுக்கு அதுவே ஒரு பண்டிகையாட்டந்தான். நடக்கற தூரம் பத்தடி தான் ஆனாலும் பேட்டைப் பொம் புள்ளேங்க, நாலும் அஞ்சுமா கூட்டம் போட்டு, சொருக்குப் பையை இடுப்புலே சொருகிக்கிட்டு கட்டைப் புகையிலையை கடைவாயிலே மாட்டியிளுத்துக்கிட்டு குசாலா பேசிச் சிரிச்சுக்கிட்டு குசவன் குடிசைக்குப் போற. ஜோக்கை நான் துார நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

வாசலுக்கெதிரே நாலாபக்கமும் கவுறு வேலி கட்டி, பானையை ஒண்ணுமேல் ஒண்ணா வரிசையா அடுக்கி, அளகாயிருந்தது. இந்த ஒரு பொங்கலில்லே, இன்னும் மூணு பொங்கலுக்கு ஆவும், அத்தினி சாமான் பண்ணியிருந்தான். பொங்கப்பானை, தண்ணிப்பானை, பதார்த்தப் பல்லா, அடுக்கு, மடக்கு எல்லாம்.........

ரெண்டு பேரும் சிரிச்ச முவமா வரவங்களுக்கு காத்து நின்னுட்டு இருந்தாங்க. அவங்க சிரிச்சாங்கன்னா, அதுவே: ஒரு அதிசயமில்ல?

பேரம் உடனே தொடங்கல்லே. அந்தப் பொம்புள்ளே சொன்னா: 'ஊரெல்லாம் வரட்டும்; ஊரெல்லாம். சேர்ந்து நாங்க கண்ணாலே பார்க்கணும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/141&oldid=590799" இலிருந்து மீள்விக்கப்பட்டது