பக்கம்:பச்சைக்கனவு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் ) 133

கொஞ்ச நேரத்திலே, குஞ்சும் கொளந்தையுமா சின்னவங்களும் பெரியவங்களுமா குசவன் வாசலுக்கெதிரே கூட்டம் முட்டிப் போச்சு, கசகசன்னு சத்தம்.

'எல்லாரும் வந்துட்டீங்களா?'ன்னு அந்தப் பொம்புள்ளே இறைஞ்சு கேட்டாள். ஆமா- ஒரு நூறு பேர் இந்த ஒரே வார்த்தையை ஒரே சமயத்திலே சொன்னா எப்படி இருக்கும் நெனச்சுப் பாருங்க.

அந்தப் பொம்புள்ளே, சிரிச்சுக் கிட்டே அவ எதிரே அடுக்கி இருந்த ஒரு பானை வரிசை மேலே ஒரு உதை விட்டா. -

உதை ஒண்ணுதான். ஆனா அந்த அடுக்கு, அடுத்த அடுக்கு மேலே சாஞ்சு, அது ரெண்டும் அதுக்கடுத்தது மேலே, அதுக்கடுத்தது மேலே வரிசை வரிசையா பானை ஒடஞ்சி பார்த்திருக்கீங்களா? கேட்டிருக்கீங்களா? எத்தனை பானை!

எங்களுக்கு என்ன சொல்றது, செய்யறதுன்னு தோணல்லே. பானையிடிஞ்சதிலே எங்க அத்தனை பேர் வவுத்திலேயும் என்னவோ இடிஞ்சது.

'நீங்களும் ஒங்க ஊரும்'- னு அந்த பொம்புள்ளே பாம்பாட்டம் சீறினாள். அவசரமா குனிஞ்சு ஒரு பிடி மண்ணெடுத்து காத்துல்லே ஊதினா. 'என் கொளந்தே பூட்டுது- நாங்களும் போறோம்- நீங்க சந்தோசமா யிருங்க......" ரெண்டு பேரும் வேகமா நடந்து போயிட்டாங்க. கண்ணுக்கு கூட மறைஞ்சு போயிட் டாங்க. கல்லா சமைஞ்சிருந்தோம்- அத்தனை பேரும் நின்ன இடத்துலே நின்னுட்டு.

ஒரு பானை கூட மிஞ்சில்லேங்க அப்பவே அந்த இடம் கடுகாடு மாதிரி ஆயிட்டுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/142&oldid=590800" இலிருந்து மீள்விக்கப்பட்டது