பக்கம்:பச்சைக்கனவு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமங்கல்யன் O 137

சிங்காரத்துக்கும் தக்கபடி லகrணமாவது உண்டா? புருவத்திலிருந்து நெற்றிக்கு முன் மயிர் ஆரம்பித்து விட்டது! மூக்கு, மேட்டைப் பார்த்துக்கொண்டு- பல்லில் கல்யாணத்துக்குத் தேங்காய் துருவலாம். அந்தக் கோணவகிடும் அதற்கு ஒவ்வாமல் கொசுவக்கட்டும், கர்நாடகமும் நாகரிகமும் கலந்த ஒரு புது நாடகமாய்

வேறே வேலையோ கிடையாது. பொழுது எப்படித் தான் போகிறது? எந்த இடத்தில் என்ன சினிமா, என்ன பாட்டுக் கச்சேரி, கூத்து, சர்க்கஸ், என்று அலைந்து கொண்டேயிருக்கும். எத்தனை நாளைக்கு, ஆய்ந்து ஒய்ந்து வீட்டில் ஆறுதலையடைய நினைந்து வந்தால்படியேறுமுன் பக்கத்து வீட்டிலிருத்து பையன் வந்து விடுவான்- 'எங்காத்துப் பாட்டியோடு உங்காத்து மாமி சினிமாவுக்குப் போயிருக்கா. உங்களை நேரமாச்சுன்னா சாதத்தை எடுத்துப் போட்டுண்டு, எலி தள்ளாமல் அழுந்த மூடிவைக்கச் சொன்னா?” அடராமா இப்படியும் என் பிழைப்பு ஆகனுமா? "அழுத்த மூடிவைக்கச் சொன்னா'என்ன வக்கணை! கோர்த்து அறையலாமா என்று ஆத்திரம் வரது வந்து என்ன பண்ணுகிறது?

வ ரு வ | ள் . குறட்டு விட்டுத் துரங்கும் பிரம்மானந்தத்தை கலைக்க, வாசற்கதவின் வெளித் தாழ்ப்பாளைத் தடதடவென்று ஆட்டிக்கொண்டு, லலல’ சினிமாவில் கேட்ட புதுமெட்டை இழுத்தபடி, "என்ன தூக்கம் அதுக்குள்ளே, படம் பத்தாயிரம் அடிதானே? சுருக்க விட்டுட்டான். சுமாராய்த்தானிருந்தது ஐய! நன்னாவேயில்லை"

ஒரொரு தடவையும் இப்படித்தான் போவதில் என்னவோ குறைச்சலில்லை. 'பூ! எ ன் ன த் ைத ப் பாடிப்பிட்டேன்! என்னவோ- தேவலை- த்ஸ்சுமாராயிருக்கு நன்றாயில்லை என்று சொன்னால்தான் நாகரிகத்தின் சிகரத்தைப் பிடித்து விட்டதாய் நினைப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/146&oldid=590804" இலிருந்து மீள்விக்கப்பட்டது