பக்கம்:பச்சைக்கனவு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமங்கல்யன் O 139

ஆசைப்பட்டு பல்லையினித்தேனா? இதைவிடப் பெருந் தன்மையாய் யாராலிருக்க முடியும்? இதையறிஞ்சவர் யார்?

ஆனால் ஒருத்தி அறிந்திருந்தாள். மாமியார் என்றால் எந்த மாமியார் என்று எனக்கே சந்தேகம் வந்து விடப் போகிறது. துளசியின் தாயார். அன்றைக்கு மாப்பிள்ளை பழிைத்த பின், முகூர்த்தத்திற்கு முதல் நாளிரவு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாளே!

'ஏண்டி துளசி'- பக்கத்தறையில் பேசினது தலையிலி டிக்கிறமாதிரியிருந்தது, அந்த அம்மாவுக்கே குரல் கட்டை. ரகஸ்யமாய்ப் பேசறாளாம், சிரிப்பு வரது!

'ஏண்டி துளசி- உம்முணாமூஞ்சியாருக்கயே! நாமி ருக்கும் நிலையென்ன நிலவரமென்ன? உனக்கு அப்புறம் இன்னும் நாலு பெண் குதிராகக் காத்திண்டியிருக்குகள்! மங்கல்யத்துக்கு மஞ்சள் கயிறுகூட நமக்கு செலவு வைக்காமல் பண்ணிக்கறப்போ, இந்த மட்டுக்கும் அகப்பட்டதேன்னு இல்லாமே...!"

அதற்கு ஏதோ பதில் கிளம்பிற்று. ஆனால் காது கேட்கவில்லை. என்றைக்காவது கேட்டிருந்தால்தானே அன்றைக்கு கேட்கப்போகிறது! கையைப் பிடித்து வீட்டுக்குக் கூட்டி வந்ததிலிருந்து சாகறவரைக்கும் அப்படியேதானே!

மறுபடியும் மாமியார்- 'என்ன உத்தியோகம் பண்ணறான்னு தெரியுமா? இப்போதான் புதுசா சம்பளம் ஒசந்திருக்காம், உனக்கென்னடி குறைச்சல்? நகையும் நட்டும், பட்டும் பனாரிசுமா வாங்கி வாங்கி உன்மேல் அடுக்கப்போறான் பாரு! கூ ைற ப் பு ட ைவ ைய ப் பார்த்தையா துளசி? கண்ணைப் பறிச்சுண்டு போறதுடி: ஜரிகை உடம்பை அறுத்துTடுமேன்னுதான் கவலை- உம்? என்ன சொல்றே? ஊம்? சொல்வதை உரக்கச் சொல்லித் தான் அழேன்! ஒரு வழியா ஊமையாயிருந்துட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/148&oldid=590806" இலிருந்து மீள்விக்கப்பட்டது