பக்கம்:பச்சைக்கனவு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 C லா. ச. ராமாமிருதம்

என் பெண் ஊமைன்னு சொல்லிவிடுவேன், அப்பவும் அவன் பண்ணிக்கத் தயார், அவ்வளவு நல்லவனா யிருக்கான்'- திடீரென்று- அடி போடி அசடே! என்னமோன்னு பார் த் தேன், அவனுக்கென்னடி குறைச்சல்? கூனா, குருடா ஊமையா? வியாதியா? ஆண் பிள்ளைக்கு ஏதுக்கடி அழகு?- ஆமா, நீ சிவப்பா யிருக்கையே-அந்தப் பெருமை தாங்க முடியல்லையாக்கும்: ஆனைகறுத்தாலும் ஆயிரம் .ெ பா ன் னு டி ஆள் கல்லாட்டம் இருக்கான் கடோத்கஜன் மாதிரி அந்தக் கூட்டமே ஆயுசு கெட்டிடி' அத்தோட அவனுக்குத்தான் செவ்வாய் தோஷம் இருக்கேயொழிய உன் ஜாகத்தில் இல்லே. அதனாலே தாலி கட்டிக்கறபோதே அடிச்சு விழாதே (நான் .ெ க | ஞ் ச ம் பூசினாப்போல்தான் இருக்கேன் அதற்காக கடோத்கஜன் என்கனுமா?). சரி அழுதுாண்டேயிரு. அம்மா செத்துப் போயிட்டால் இப்படித்தான் அழுவேன் என்று அழுது காண்பிக்கிறையே அது வரைக்கும் ரொம்ப சந்தோஷண்டி-'

ஆமாம், எரிச்சலாய்த்தான் வரும், வராதா கல்யாண வீட்டில் இப்படி மூக்கைச் சிந்திப் போட்டுக்கொண் டிருந்தால்? இதுகளையெல்லாம் கட்டிக்கலையென்று யார் அழறா? எல்லாம் அம்மா சொல்லைத் தட்டப்படாதுன்னு தானே?

'அப்பா, நான் செத்தால் சவுண்டிக்கு உன் தோல்மேல் ஒருத்தி தர்ப்பை பிடிச்சால்தான் நான் கரையேறுவேன்’ என்று தீர்த்துச் சொல்லிவிட்டாளே! தவிர, இதில் அம்மா சொல்லி ஆகவேண்டியதே என்ன இருக்கிறது? நமக்கும் சந்ததி வேண்டாமா? சந்ததிக்கென்று எத்தனை பேர் என்னென்ன பண்ணவில்லை? வியாசன் கூட, தாய் சொல்தட்டாது தம்பி மனைவிகளைக் கருவுறுத்த வில்லையா? அந்த உயர்ந்த தத்துவம் யாருக்கு இருக்கு? யாருக்குப் புரியப்போகிறது? இவள் அழகைப் பார்த்தா நான் இவளைக் கலியாணம் பண்ணிக்கொண்டேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/149&oldid=590807" இலிருந்து மீள்விக்கப்பட்டது