பக்கம்:பச்சைக்கனவு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமங்கல்யன் O 143

பெற்று- பிரமிக்கத்தக்கதாயிருக்கும். உள்ளத்தில் இம்சை கிளறும், இன்னும் சற்று கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தால் கரைந்து விடும் காணலோ என்று கூட மனம் திகைக்கும். கதையில், நந்தவனத்தில் ராஜகுமாரி போல், அவள் எதற்காக, எதை எதிர்பார்த்து அப்படி நின்றாள்?

இன்னொரு சமயம், ஒரு நாளிரவு நடு நிலவு. அன்று பெளர்ணமி. இறுக்கம் தாங்க முடியவில்லை. தூக்கம் வரவில்லை. மாடியில் திறந்த வெளியில் சற்று உலாவலாம் என்று வந்தால், அங்கு உட்காந்து முகத்தைக் கையில் புதைத்து, அழுது கொண்டிருக்கிறாள். தலைமயிர் அவிழ்ந்து தரையில் புரள்கிறது. அன்னிக்குத்தான் அடிவயிற்றில் பகீர்’ என்றது. இதென்னடா கிரஹசாரம்: ஏதாவது யகதிணியைக் கட்டிக்கொண்டு விட்டேனா? இது மாதிரி தான், நடுராத்திரியில், நடுநிலவில், பாட்டை யில், அதுகள் அழகான ருபம் எடுத்து அழுது கொண் டிருக்குமாம். அனுதாபப்பட்டு பக்கத்தில் போகிறவர்களை அடித்துவிடுமாம்- ஒசைப்படாமல் பின்வாங்குவது தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்?

அடுத்தநாள் அதைப்பற்றி- இதைப்பற்றி அவளைக் கேட்கவே அச்சமாயிருக்கிறது. வெறும் பேச்சுக்கே பூனையைப் பார்த்த எலி போல உடம்பெல்லாம் வெட வெடவென்று உதறுமே, இதற்கா பதில் சொல்லப் போறாள்?

எல்லாம் போகட்டும், நான் என்ன சிங்கமா, புலியா, கரடியா. மனுஷ்யன் தானே! எதிலே குறைச்சலாயிருக் கிறேன்? புத்தியில் குறைச்சலா? ஆபீசில் என் வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பிருக்கிறது! நான் காண்பித்த இடத்தில் கண்ணை மூடிண்டு துரை கையெழுத்துப் போட வில்லையா? காரியசாதனையில் குறச்சலா? அல்லது பணத்தில் குறைச்சலா? இன்னிக்குத் தேதியில் நான் கண்ணை மூடினால் மரணபண்டு பத்தாயிரம் அவளைச் சேராதா? இதைவிட ஒரு புருஷன் ஒரு பெண்டாட்டிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/152&oldid=590810" இலிருந்து மீள்விக்கப்பட்டது