பக்கம்:பச்சைக்கனவு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 0 லா. ச. ராமாமிருதம்

என்ன செய்யமுடியும்? நான் சாகிறதுக்கு முன்னால் அவள் செத்தால், அது என் தப்பா? அல்பாயுசுக்கட்டை, அல்பாயுஸ்:

ஒரு தினுசில் அவள் கொடும்பாவிதான். அவள் கர்ப்பமா இருக்கையில் அவள் எண்ணத்தை யார் கண் டார்கள்? அத்தனை நாள் கழித்து, என்னவோ எதிர்க்க வலுவற்றதால் அல்ல, முற்றுகையின் நீடிப்புக்கு அலுத்துப் போய் கோட்டை சரண் அடைந்தது போலன்றி, உள்வேகமில்லை.

மூன்று மாதமாய் அவள் ஸ்நானம் பண்ணவில்லை என்று நிச்சயமானதும் பாவம், அம்மாவுக்குத்தான் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால் எனக்குத்தான் சுவாரஸ்யப்படவில்லை. சப்பென்றிருந்தது. அவள் மாறி னால் தானே! எல்லாம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத் தால் சரியாய்ப் போயிடும். பொம்மனாட்டிகளே அப்படித் தாண்டா என்று அம்மா தைரியம் சொன்னாள் என்றாலும் அவள் என்னவோ உலகத்தையே தன் உதரத்தில் அடக்கினதைப்போல், என்ற மாதிரி தனக்குள் தானே பத்திரமாயிருந்தாள்.

பிரசவம் கூடியவரையில் செவ்வையாத் தானே நடந்தது! குறைமாசத்தில் ஆகியும். பிரசவம் சுகப் பிரசவம்தான். குழந்தைதான் என்னவோ மாவுப் பொம்மை மாதிரி... முதல் எட்டு நாள் வரை ஒரு தொந்தரவுமில்லை. எட்டா நாள் ராத்திரி லேசாய் உடம்பு சுட்டது. ஏதோ பால்கட்டு ஜுரம் என்று. நினைத்தது. விடியற்காலை வேளையில் துளசி எவ்வளவு அழகாய் இருந்தாள்! مية

காலை எட்டு, எட்டரையிருக்கும். 'அத்தை, தாகம் தொண்டையை வரட்டறது” என்றாளாம். 'இரு, பார்லித் தண்ணி போட்டிருக்கேன் சுடவெச்சுக் கொண்டு வரேன்' என்று அம்மா சமையலுள் உள்ளே போனாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/153&oldid=590811" இலிருந்து மீள்விக்கப்பட்டது