பக்கம்:பச்சைக்கனவு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமங்கல்யன் 0 147

"ஏன் மிஞ்ச வைக்கணும்? கொஞ்சமாய்ப் பண்றது'என்றால் வந்தது ஆபத்து.

'ஏன், நான் நிறையத் தின்கறேனே என்று வயிறெரி யறதா?’ என்று ஏதாவது ஆரம்பிப்பாள். இந்த ஏடா கோடத்துடன் என்ன செய்வது?

வீட்டில் ஏதாவது விசேஷ தினம் வந்தால் அவளுக்குக் கொண்டாட்டம். மூணு நாளைக்கு மிச்சங்களை எரியப் போட்டுத் தின்று கொண்டிருப்பாள்.

கடைசியில் அப்பா திவசக் காய்கறிகள்தான் அவளைக் கொண்டு போய் விட்டன. வேளையும் வந்து விட்டது வெச்சுக்கோ. சுண்டாங்கியைத் தின்று விட்டு இரண்டு தடவை பேதியாகி அப்புறம் அதிஸ்ாரத்தில் கொண்டு விட்டு விட்டது.

பாவம்! இருந்த வரைக்கும் அவளுக்கு மிஞ்சித்தான் மற்றதுகள். காசின் அருமை நன்றாய்க் கண்டவள். கணக்காய் போகவர ஜே.பியில் பஸ்ஸுக்கும், வெற்றிலைக் கும்தான் சில்லரை போட்டு வைப்பாள் . கையில்தான் பொட்டலமும், ப்ளாஸ்க்கும் கட்டிக்கறோமே!

நம் ஆம்படையான் பெரிய உத்தியோகம் பண்றான் என்ற எண்ணம், பெருமை அவள் ஒருத்திக்குத்தானி ருந்தது. ஆசையாய்க் கோட்டை மாட்டிவிட்டு வெற்றிலை மடித்து கையில் விரலுக்கிடுக்கில் கொடுத்து, சந்துமுனை திரும்பும் வரை, கதவுக் கம்பியைப் பிடித்துக் கொண்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பாள். நெற்றி யில் மஞ்சள் பற்றி அதில் அரையனா அகலத்துக்கு குங்குமம் ஜ்வலிக்கும். எனக்குத் தலைவலியென்றாலும் தாங்கமாட்டாள்.

உம்- ம்- எல்லாம் போச்சு, நானும் அந்தக் காலத்தில் இன்னமும் கொஞ்சம் வயசு குறைஞ்சு இதை விட முடுக்காய்த்தானிருந்திருப்பேன். இ ப் ப வோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/156&oldid=590814" இலிருந்து மீள்விக்கப்பட்டது