பக்கம்:பச்சைக்கனவு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 C லா. ச. ராமாமிருதம்

நமக்கு வயசாயிடுத்து. உடம்பு தளர்ந்து விட்டது. அம்மாவும் போயிட்டாள். நம்மை கவனிக்கறதுக்கு ஆளில்லை. இப்போ குட்டியைக் கட்டிண்டதே அதுக்காத் தானே! இல்லாட்டா இனிமேல் குழந்தை பெறப். போறோம் என்றா?

குட்டி மனுஷாளுக்கெல்லாம், த த் து பித்து எண்ணங்கள் கிடையாது. அவாளுக்கு நன்னா தெரியும் நான் செத்தபிறகு சொத்தெல்லாம் குட்டிக்குத்தான் என்று. பாவம், ஊசக்குழம்பெல்லாம் சாப்பிட்டு தருமி சேர்த்து உசிரையே கொடுத்த சொத்து! நமக்கும் இன்னும் எத்தனை நாள்: ஆச்சு போச்சு. கைகாட்டி சாய்ந்தாச்சு. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி. -

குட்டியும் நன்னா சமைக்கிறாள்- ஏதோ இருக்கும். வரை பிரியமாயிருக்காள். இந்த வயசில் எனக்கு இதைவிட என்ன வேணும்? இன்னும் கொஞ்சம்தான் பாக்கி,

உள்...ஸ். தூக்கம் கண்ணை அயட்டறது... உண்ட களைப்போன்னோ, இப்படியே திண்ணையில் சாய், வோமா......?

குட்டி..வத்சலை. துளசி.த.ரு...மி.உ...ர் ர்.ர் க் ள் ... கொர் ர் ர்.........

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/157&oldid=590815" இலிருந்து மீள்விக்கப்பட்டது