பக்கம்:பச்சைக்கனவு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சாட்சி

சின்ன வயதின் விளையாட்டு ஒன்று இப்போது ரூாபகம் வந்தது.

'தட்டாமாலை தாமரைப் பூ தட்டாமாலை தாமரைப் பூ சுற்றிச் சுற்றிச் சுண்ணாம்பூ- '

தலையின் தனிக் கிறுகிறுப்பில் அவனைச் சுற்றி இருந்தவையும் இருந்தவரும் பொங்கி வடியும் அலைபோல் மேலும் கீழும் மிதந்து ஆடினர்.

அவன் சிநேகிதர்கள் கூத்தும் கொம்மாளமும் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பார்ட்டி ஒரு தினுசான கட்டத்துக்கு வந்து விட்டது. வாயிலிருந்து புறப்பட்டதற்கெல்லாம் சிரிப்பு. நன்கு ஆராயின், அவ் வார்த்தைகளில் உப்புப் புளி இருக்காது. இதற்கா இவ்வளவு சிரித்தோம் என்று வெட்கமாய்க்கூட இருக்கும். ஆனால் இப்போதோ

“என்னாப்பா, மிஸஸ்ஸைக் கூப்பிடுப்பா கட்டிண்ட வுடனே அடுப்பங்கரையில் பூந்துாட்டாங்களா?'

இதுக்கு ஒரு அவுட்டுச் சிரிப்பு. 'அவங்க ஜாதியிலேயே அதானே ஒரு நியூலென்ஸ்!" உடனே ஒரு கொக்கரிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/158&oldid=590816" இலிருந்து மீள்விக்கப்பட்டது