பக்கம்:பச்சைக்கனவு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி O 151

"சரி, ஒரு வகையாக எல்லாம் முடிந்தது!’ "ஆரம்பித்தது என்று சொல்லு' அவன் நண்பன் சிரித்தான். 'வாஸ்தவந்தான். ஆரம்பித்ததா?”

'ஏதோ உன் புண்ணியத்திலே-' “என்னிடம் என்ன இருக்கிறது? உங்களிருவர் எண்ணத்திலேயும் என்று சொல்லு புண்ணிய பாவம் முக்கியமில்லை. எண்ணம்தான முக்கியம்.'

'அதுவும் சரி.' 'இருந்தாலும் எல்லோரும் சட்டென்று செய்யாத காரியத்தை செய்து விட்டாய். நீ தைரியசாலிதான். நான் என்னவோன்னு நினைச்சேன். அவன் நண்பனின் புகழ்ச்சி குளிர்ச்சியாய் இருந்தது. மனம் பெருமிதம் கொண்டது. நான் யாருக்கப்பா பயப்படனும் என்னை குற்றஞ் சொல்ல சுற்றுமுற்று எந்த உறவு தட்டுக் கெட்டுப் போச்சு? அத்தோடு இந்தக் காலத்தில் இது அதிசயமா?” "அதுவும் சரிதான், இது மாதிரி நோக்கங்கள் இருப் பதும்.'

'நோக்கங்கள் மாத்திரம் இருந்து என்ன பிரயோ சனம். காரியத்தில் காண்பிக்காமல்?'

அவன் நண்பன் புன்னகை புரிந்தான். 'நோக்கம் வேறு. காரியம் வேறு. இன்னும் பார்த் தால் ஒன்றுக்கொன்று சம்பந்தங் கூட இல்லை என்று சொல்வேன்.'

'அதென்ன அப்படிச் சொல்லிவிட்டாய்?" 'இப்போ என்ன அதைப்பற்றி ரொம்ப நேரமாய் விட்டது. பஸ் கூட அகப்படாது என்று நினைக்கிறேன். கால்நடைதான். நாளைக்கு என்ன, ஆபீஸ் மட்டமா?’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/160&oldid=590818" இலிருந்து மீள்விக்கப்பட்டது