பக்கம்:பச்சைக்கனவு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி C 153

"இங்கே வா."

அசைந்தாடி அவனை நோக்கி வந்தாள். மேஜை யொட்டிச் சாய்ந்தாற்போல் உட்கார்ந்து இடுப்பில் ஒரு கையை ஊன்றி இன்னொரு கையால் கிண்ணத்தின் செதுக்கல்களை வருடினாள். இன்னமும் ஏதோ யோசனை யில்தான் இருந்தாள்.

'நன்றாயில்லை?”

ஆமெனத் தலை ஆட்டினாள்.

‘'எதிரும் புதிருமாய் இரண்டு மூக்குகள் ஒரே சமயத்தில் எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று- '

அவன் முகம் சிவந்தது; 'போதுமே-!'

"நான் விளையாடவில்லை- உணர்ச்சிப் பெருக்கில் அவன் முகம் சிவந்தது 'புரியவில்லையா? வாழ்க்கையின் கோப்பையிலிருந்து ஸ்திரியும் புருஷனும் ஒரே சமயத்தில் பருக... ”

பேசிக் கொண்டிருக்கையிலேயே தொடர் மறைந்தது, அவள் முகத்தில் கவிந்த சிந்தனையைப் பார்த்ததும்; ஏன், இருவருமே இதற்கு முன்னரே வாழ்க்கையின் கோப்பை யில் பருகியவர்தானே! அதே எண்ணம் அவளுக்கும் தோன்றி விட்டது என அவள் முகத்தை மின் வெட்டிய சுளிப்பில் அறிந்தான். தன் அசம்பாவிதத்தை உடனே உணர்ந்தான். அதை மறைக்க, அவளைத் தழுவினான். அவன் அணைப்பில் அவள் உடல் குலுங்கிற்று. ஒரு விம்மல் கிளம்பிற்று.

"சே, சே, இப்போ என்ன நேர்ந்து விட்டது?" 'ஒண்ணுமில்லை- ' என்று விக்கினாள். வெள்ளப் பெருக்கில், மேல் அடித்துக் கொண்டு வரும் குப்பைக் கூளம்போல், மனம் கரைந்து ஓடுகையில், வாயில் என்ன வார்த்தைகள்தாம் வந்தன தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/162&oldid=590820" இலிருந்து மீள்விக்கப்பட்டது