பக்கம்:பச்சைக்கனவு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 0 லா. ச. ராமாமிருதம்

சிந்தனை குறைந்து அதில் இளமை கூடத் தோன்றும் சந்தோஷமாக இருக்கவே அஞ்சினாளோ?

ஆனால் அவளைப் பற்றி அவனுக்கு என்ன? அப்புறம் ஒரு நாள் அவன் இடத்திற்கு வந்தாள். நேர்ப் பார்வையாக அவனைப் பார்க்காமல், மேஜைமேல் ஒரு பேனாக் கட்டையை நிற்க வைத்துக்கொண்டே:

'எனக்குப் பத்து நாள் லீவு வேணும், தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறது. ஆபரேஷன் பண்ணிக் கொள்ளணும் என்று டாக்டர் சொல்கிறார். ஆஸ்பத்திரி யில் பத்து நாளாவது இருக்கவேண்டி வருமாம்” என்றாள்.

லீவை வாங்கிக் கொடுத்தால் மட்டும் ஆகிவிட்டதா? மரியாதைக்கு ஒரு தரமேனும் ஆஸ்பத்திரியில் போய்ப் பார்க்க வேண்டாமா? அத்துடன் அவனுக்குந்தான் ஆபிஸ் விட்டதும் வெட்டி முடிக்கும் வேலைதான் என்ன இருக்கிறது? வீட்டில் எவள் காபியும் டி.பனுமாய்க் காத்துக் கொண்டிருக்கிறாள்? எந்தக் குழந்தை 'எனக்கு பிஸ்கோத்து வாங்கிண்டு வந்தையாப்பா?’ என்று காலைக் கட்டப்போகிறது?

அவள் வீவு எடுத்த இரண்டு நாட்களுக்கெல்லாம், ஆஸ்பத்ரி விலாசத்தை லீவு மனுவிலிருந்து தெரிந்து கொண்டு ஆபீஸ் விட்டதும் அவளைக் காணச் சென்றான். அவள் இருந்த ஸ்பெஷல் வார்டைக் கண்டுபிடிக்கவே நேரமாயிற்று. கடைசியாக அந்த அறையுள் நுழைகையில், அவளை அப்போதுதான் ஆபரேஷன் வார்டி'லிருந்து "ஸ்ட்ரெச்சர் வண்டியில் கொண்டு வந்திருந்தார்கள். மயக்க மருந்தின் போதை இன்னும் தெளியவில்லை. இரண்டொரு வேலைக்காரர்கள் அவளைச் சுற்றி நின்றிருந்தார்கள்.

அவனைப் பார்த்தும் அவர்களில் ஒருவன் "என்னாங்க? இவங்களை பார்க்கத்தானே வந்தீங்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/165&oldid=590823" இலிருந்து மீள்விக்கப்பட்டது