பக்கம்:பச்சைக்கனவு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 o லா. ச. ராமாமிருதம்

எதையாவது தேடிக்கொண்டே இருந்தது. ஒன்றுமே அகப்படாவிட்டாலும் ஒரு குத்து மண்ணையேனும் தன் மேல் இறைத்துக் கொண்டு சென்றது.

அவன் மெதுவாக அவளைப் பேரைச் சொல்வி அழைத்தான். அவள் மடிமேல் சேர்ந்திருந்த அவள் கைகளை அவன் கைகள் நாடின.

'நம் வாழ்க்கை நம்மிடந்தான் இருக்கிறது. எனக்கு உற்றார் உறவினர் குற்றம் சொல்வோர் ஒருவரும் இல்லை. உனக்கும் இல்லை. நீ எனக்குத் துணை நான் உனக்குத் துணை. நமக்கு யாரால் ஆகவேண்டியது என்ன? நம் வாழ்க்கை நம்மிடந்தான், ஏன் சும்மா இருக்கிறாய்? ஏதாவது சொல்லேன்."

அவள் கைகள் எழுந்து தவித்து செயலற்று மறுபடியும் மடியில் விழுந்தன. முகத்தில் வேதனை ஆடியது. அவன் குரலின் அவசரம் அவளுக்குச் சகிக்க முடியவில்லை.

'சொல்லேன்-’’

அவள் ஒன்றுமே சொல்லவில்லை. பெருமூச்சு அவனிட மிருந்து கிளம்பியது, போராட்டத்தின் அசதி தாங்காது. அவள் முகம் அவன் தோள்மேல் சாய்ந்தது. அவன் அவளை அணைத்துக்கொண்டான், அந்தப் பக்கமாகச் சென்ற இருவர் அவர்களைப் பார்த்துவிட்டு, முழங்கையோடு முழங்கை இடித்துக் கொண்டு கிசுகிசு வென்று பேசிக்கொண்டு சென்றனர். பாலத்தின் இறக்கத்தி. லிருந்து அவர்களின் கேலிச் சிரிப்பு எட்டிற்று. ஆயினும் அவன் சட்டை செய்யவில்லை.

'தம் வாழ்க்கை நம்மிடந்தான் இருக்கிறது.'

இராச் சாப்பாட்டுக்குப் பின் இருவரும் வீட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்தனர். இரவின் அமைதியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/169&oldid=590827" இலிருந்து மீள்விக்கப்பட்டது