பக்கம்:பச்சைக்கனவு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 0 லா. ச. ராமாமிருதம்

தாழ்வாரத்திலிட்ட பிரம்புதாற்காலியில் சாய்ந்து கொண்டு குனிந்த தலை நிமிராது யோகத்தில் ஆழ்ந்தது போல் உட்கார்ந்திருக்கிறார். என்ன இருக்கிறது இவ்வளவு யோசனை பண்ண? கண்ணிருந்தாலே பொழுது போக மாட்டேன்கிறது. இவருக்குப் பார்வையில்லாமல், பேச்சுமில்லாமல் எப்படிப் பொழுதுபோகிறது?

மாலை முதிர்ந்து இருள், தோட்டத்தில் வாழை மரங்களிலும் வைக்கோற்போரிலும் கிணற்றடியிலும் வழிய ஆரம்பித்தது. வானம் அப்பொழுதுதான் தூக்கம் கலைந்ததுபோல், அதன் பல்லாயிரம் கண்கள் ஒவ்வொன்றாயும், ஒருங்கொருங்காயும் விழித்துச் சிமிட்ட ஆரம்பித்தன.

"கலத்தில் சாதம் போட்டிருக்கிறேன்; சாப்பிட வாங்கோ.'

"ஊஹாம்.' சாப்பிடாதபடி என்ன நடந்துவிட்டது? கண்ணாடி போனால் பீடை தொலைஞ்சது- நீங்க வாங்கோ.'

'இல்லை எனக்கு வேண்டியில்லை, வற்புறுத்தாதே; தான் மாடிக்குப் போகிறேன்.”

அவன் படிப்படியாய்த் தொட்டு மாடியேறுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதேது, இந்தத் தடவை கோபம் மீறிவிட்டாப்போல இருக்கு சமாதானப்படுத்த வேண்டியதுதான்.

மாடிக்குப்போய் ஜன்னலண்டை போட்டிருக்கும் குறிச்சியில் சாய்ந்தான். தென்றல் நெற்றி வியர்வையை ஒற்றியது.

  • இச்- இச்-' இரவில் கண்ணிழந்து அவனைப்போலவே தன்னந் தனியான பறவை இடந்தேடியலைகிறது.

' கீச்- கீச்- கீச்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/17&oldid=590672" இலிருந்து மீள்விக்கப்பட்டது