பக்கம்:பச்சைக்கனவு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி O 161

வாடைக் காற்றின் குளுமை கலந்தது. மெளனம் தனி இன்பமாக இருந்தது

அவள், 'நேற்று இரவு நடந்ததை நீங்கள் மன்னித்து விடவேண்டும்' என்றாள்.

'இப்போ என்ன அதுபற்றி?’’

'உங்களை நான் விரும்பவில்லை என்று நினைக்க வேண்டாம்.’’ .

சே! அவள் தன் உள்ளுணர்ச்சிகளை அப்படி வெளிப்படுத்துகையில் அவனுக்கு உடல் குறுகுறுத்தது.

"இதுமாதிரி நான் விட்டுப் பேசுவதால், நான் வெட்கம் கெட்டவள் என்று நினைக்கறேளா?'

'நமக்குள் என்ன வெட்கம்?"

பேச்சின் போக்கிலேயே, நாடகத்தில் போல் ஒரு

பொய்மை நடுநூல் ஒடுவது தெரிந்தது. அவர்களை அறியாமலே அது புகுந்தது ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் அவர்களிடையில் ஏதோ ஒரு வெட்கம் இல்லாமல் இல்லை. அதை ஒருவருக்கு ஒருவர் மறுத்துக் கொள்வதிலேயே அது இன்னும் ஊர்ஜிதமாயிற்று, ஆயிரம் கட்டுக் கட்டினாலும் ஒடிந்த உறுப்பிலிருந்து முண்டி நிற்கும் எலும்பு போல்.

'இம்மாதிரி நீங்கள் சொல்வது எனக்கு எவ்வளவு தைரியமாயும் சந்தோஷமாயும் இருக்கிறது தெரியுமா?"

g

"எனக்கும் அப்படித்தான்-' அடுத்த நிமிஷமே. அவனுக்குத் தன் நாக்கைத் துண்டித்துக் கொள்ளலாம் போல் இருந்தது. ஏனோ தெரியவில்லை, சில எண்ணங்கள் மனத்துள் அடங்கியிருக்கும் வரை உருவாயிருக்கின்றன. பேச்சாய் வெளிவந்ததும் கொப்புளம் உடைவதுபோல் உருவெடித்துப் போய் விடுகின்றன.

ப.- 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/170&oldid=590828" இலிருந்து மீள்விக்கப்பட்டது