பக்கம்:பச்சைக்கனவு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.8 C லா. ச. ராமாமிருதம்

தட்டாமாலை தாமரைப்பூ

ட்டவந்தால் குட்டுவேன்

எட்டிப்போனால் துப்புவேன் சொட்டுச் சொட்டென வண்டல், மனத்தில் சொட்டிக் கொண்டேயிருக்கிறது.

ஒரு நாள் சட்டென அவனுக்கு ஒரு யோசனை

தோன்றிற்று. ஆபிசிலிருந்து சீக்கிரமே திரும்பி வந்து விட்டான். அவள் ஜன்னலண்டை முகத்திற்குக் கையை முட்டுக்கொடுத்து உட்காந்திருந்தாள். அவள் முகம் சோபையிழந்திருந்தது. அவன் கோட்டைக் கழற்றிக் கொண்டே, சட் சட், கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே' என்றான்.

'என்ன, சீக்கிரம் திரும்பிவிட்டீர்கள்? உடம்பு சுகந்தானே?"

வந்து கிட்ட உட்காந்தான்.

'பத்து நாள் லீவு போட்டுவிட்டேன். நாம் எங்கேயாவது வெளியூர் போய், குவியாக இருந்து விட்டு வருவோம். வண்டி காடி சத்தமும் இந்தப் புழுதியும் புழுக்கமும் இல்லாமல் எங்கேயாவது கிராமாந்தரம் போவோம், மாற்று உடைக்கு ஒரு பெட்டி தவிர வேறே மூட்டை முடிச்சு வேண்டாம். நிம்மதியாக, இடமாற்ற மாக இருப்போம். என்ன?”

அவள் புன்னகை புரிந்தாள்.

அவர்கள் தீர்மானித்த இடம் போய்ச் சேருகையிலேயே அந்தி மந்தாரை பூத்துவிட்டது. இரவு வரப்போகும் மழைக்காக வானத்தில் மப்பு. வயற் பரப்புகளைத் தாண்டிக் கொண்டிருக்கையிலேயே கிராமத்தைச் சுற்றிய வாய்க்காலின் நெளிவு அழகாகத் தெரிந்தது.

ஒர் அம்மையார்ப் பாட்டி வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து அதில் தங்க ஏற்பாடாயிற்று. அதைக் குடிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/177&oldid=590835" இலிருந்து மீள்விக்கப்பட்டது