பக்கம்:பச்சைக்கனவு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 C லா. ச. ராமாமிருதம்

அவர்களுக்கு அவள் ஒரு சிறு அகல் விளக்கு கொடுத்திருந்தாள். ஆடும் சுடரில், அறையில் சுவரின் மேல் ஒரு மூலை ஒரு சமயம் இருண்டது. மறு சமயம், இருண்ட இடம் சற்று வெளிச்சமாயிற்று. பரணியில் எலிகள் பிராண்டி கீச்சிட்டன.

ஒரு மூலையில் நெற்குதிர்.

வெளியே, மேலே இடி குமுறியது.

சப்தமே சப்திக்கச் சோம்பிற்று.

பட்டணத்துக்கும் இவ்விடத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்: இந்த வேளையின் லாகிரியில், இப்படியே, மெழுகிய மண் தரையில் நாள் கணக்கில் எழுந்திராது படுத்திருக்கலாம் போலிருக்கிறது.

கூரைமேல் படபடவென்று மழை இறங்கிவிட்டது. கண்ணில் உறுத்தும் துரும்பை எண்ணெய் ஒதுக்குவது போல், அவனுள் அந்த மழை புகுந்து எதோ செய்தது. உள்ளம் நெகிழ்ந்தது.

இந்தச் சூழ்நிலை அவளையும் ஏதோ அவஸ்தைப் படுத்துவது அவள் முக த் ைத ப் பார்க்கையிலேயே தெரிந்தது. அவள் கண்களில் ஜலம் துளித்திருந்தது. உதடுகள் நடுங்கின. மனங்கள் ஒன்றை ஒன்று துணை நாடும் வேளை காணும் வேதனை இன்பத்தின் வேதனையா? வேதனையின் இன்பமா?

அவள் பெயர் அவன் வாயில் அசைந்ததுமே, அவளுக்குப் பஞ்சில் பொறி வைத்த மாதிரி ஆகிவிட்டது. ஒரு தாவு தாவி அவன் மார்மேல் விழுந்து கதறினாள். ஏன்? புரியவில்லை. ஆயினும் அவள் கண்ணிரில் அவன் மார்பு நனைகையில், எலும்பு உருகிற்று. அவளை இறுக அனைத்துகொண்டான்.

திடீரென்று அவள் கண்கள் பயங்கரத்தில் வெறித்துச் சுழன்றன. வீல்' என அலறி, அவனிடமிருந்து உதறிக் கொண்ட வேகத்தில் பின்னுக்கு வீழ்ந்தாள். பயத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/179&oldid=590837" இலிருந்து மீள்விக்கப்பட்டது