பக்கம்:பச்சைக்கனவு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亭西L明 ○ 星7丑

அவள் முகத்தில் குழுமிய அவலக்ஷணம், அருவருப்பை விளைவித்தது. அவள் பார்வை சென்ற வழி அவன் நோக்கும் சென்று சுவரிலிருந்து எட்டிப் பார்க்கும் ஒரு முகத்தில் நிலைத்தது.

முகமென்றால் முகமில்லை. முகத்தின் பிண்டம். எண்ணற்ற தடவைகள், பல மழைகளின் ஜலம் வழிந்து, நாளடைவில் உருவான கறை, ஆயினும் அகலின் சுடர் குதிக்கையில் அது அமானுஷ்யமான ஜீவனுடன் அவர்களை யும் அவர்களுடைய காரியங்களையும் கவனித்துக் கொண் டிருந்தது. கண்கள் ஒருமுறை சிமிட்டின.

சீ, பிரமை தூரத்தில் ரயிலின் ஊதல் காற்றில் மிதந்து வந்தது. அதைக் கேட்டதும் க்றீச்' என்று மறுபடியும் அவள் கத்தினாள். நல்ல வேளையாகத் தெருவில் அடிக்கும் மழைக்காற்று அந்தக் கத்தலை அடித்துக் கொண்டு போயிற்று. கூடத்தில் பாட்டி முணகிப் புரண்டான். மேலும் மேலும் பீறிட்டு வரும் பேய்க் கூச்சலை அடக்க, வாயில் முன்றானையைத் திணித்துக் கொண்டாள். பொறியில் மாட்டிக் கொண்ட எலிபோல், அவள் உடல் வெடவென உதறிற்று.

'என்ன இது?’’ 'இல்லை, என்னைத் தொடாதேயுங்கள்! என்னிடம் வராதேயுங்கள்- அவள் குரலின் தீர்மானமும் கட்டளை யும் கேட்டதும் அவனுக்கு ஆச்சரியமும் கோபமும் உண்டாயின. அச்சங் கூடக் கண்டது. என்ன புத்திக் கோளாறா? திடீர் திடீரென்று.

'சரி, உன்னைத் தொடவில்லை. படுத்துக்கொள் -' 'இல்லை, உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.'

நாளைக்குப் பேசிக் கொள்ளலாம்.'

'இல்லை, நாளைக்கு வேளை கிடையாது. நாம் இங்கு விட்டுப் போய் விடவேண்டும். எப்படியும் நான் போய் விடுவேன். நாம் பிரிந்து விடவேண்டும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/180&oldid=590838" இலிருந்து மீள்விக்கப்பட்டது