பக்கம்:பச்சைக்கனவு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 0 லா. ச. ராமாமிருதம்

"என்ன உளறுகிறாய்! ஒரு புருஷன் பொறுமைக்கும் எல்லை இல்லையா? அவன் பேச்சு அவள் காதில் ஏறவில்லை.

'இல்லை என் புருஷனைப் பற்றி உங்களிடம் சொல்லியாக வேண்டும்-' -

அவன் புகைச்சிரிப்பு சிரித்தான். நீ உன் புருஷனைப் பற்றியும், நான் என் மனைவியைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதற்கும், பேசாத வேளைக்கு யோசனை பண்ணிக் கொண்டிருப்பதற்குந்தான் கல்யாணம் செய்து கொண்டோமா!'

'இல்லை. நீங்கள் என் கணவரைப்பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். அதுவும் இப்போதே. ரொம்பவும் சுறுசுறுப்பான மனிதர். நின்ற இடத்தில் நிமிஷம் நிற்கமாட்டார். உடலில் எப்போதுமே துடி துடிப்பு. எல்லாமே அவருக்கு அவசரம். சாவதானத்தைச் சற்றுக் கூடப் பொறுக்க மாட்டார். நானோ சுபாவத்திலேயே மெது. எப்படித்தான் இப்படி ஒருவருக்கு ஒருவர் வாய்த்தோமோ தெருவில் நாங்கள் இருவரும் சேர்ந்து போனால், என்னால் சேர்ந்தே போக முடியாது. பின்னால் தங்கிவிடாமல் இருப்பதற்காக அவர் பக்கத்தில் ஓடிக் கொண்டேயிருப்பேன். அவர் நடையின் வீச்சும் வேகமும் அப்படி. எல்லாவற்றிலுமே அப்படித்தான். வாழ்க்கையில் அவர் நீந்திய வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. சதா திணறிக் கொண்டிருந்தேன்.

"எங்களிருவருக்கும் இவ்வளவு குணபேதங்கள் இருந்தும் என்னிடம் அவருக்கு வாஞ்சை அதிகம்.

'ஒரு நாள் மாலை அவர் ஆபீஸிலிருந்து திரும்பி வரவில்லை. எனக்கு அன்றைக்கு மறக்கவே முடியாது. அன்றைக்கு இரண்டு பேரும் சினிமா போவதாகப் பேச்சு. வேளையோடு சமைத்து வைத்து விட்டு, நான் வாரிப் பின்னி, உடுத்து, கண்ணுக்கு மையிட்டு, வெற்றிலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/181&oldid=590839" இலிருந்து மீள்விக்கப்பட்டது