பக்கம்:பச்சைக்கனவு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி C 173

வாயில் குதப்பிண்டு, அவர் வருகிற வரை பொழுது போக்குக்கு, பக்கத்து வீட்டுக் குழந்தையை வைத்துத் கொஞ்சிண்டிருந்தேன். அப்போ அவசர அவசரமாக ஆபீஸ் பியூன் சைக்கிளில் வந்து இறங்கினான். அவன் முகம் பார்க்கச் சகிக்கவில்லை.

என்ன டா?’’ 'அம்மா, ஐயர் வீடு திரும்ப எலெக்ட்ரிக் வண்டி பாஸாணப்புறம் ஒடிப் பிடிச்சு கால் வழுக்கி, வண்டித் கடியில்ே பூட்டாரம்மா'

அவனுக்குப் பிடரி குறுகுறுத்தது. இறந்து போனவனின் ஆவியே, இப்போது அந்த அறைக்குள் வந்து அவனைத் தொட்டமாதிரி இருந்தது. சாரல் அறைக்குள் கூட அடிக்க ஆரம்பித்து விட்டது. மண் தரையில் அங்கங்கு ஜலம் கசிந்தும் குழிகளில் தேங்கவும் தலைப்பட்டது.

'வீட்டுக்குக் கொண்டு வந்தது அவர் உடம்பில்லை. மாமிசப் பிண்டந்தான்.”

சுவரில் முகம் சிரித்தது. அவன் அவளைப் பார்க்கக்கூட இல்லை. அவன் தலை, கொஞ்சம் கொஞ்சமாகத் தோள்களுக்கு இடையில் குனிந்து கவிழ்ந்தது. தோள்கள் குலுங்கின. அவள் அவனிடம் நகர்ந்து பரிவுடன் தலையைத் தன் தோள் மேல் சாத்திக் கொண்டாள்.

'என் அன்பே-' என்றாள். ஆனால் அவள் செய்கையிலும் வார்த்தையிலும் அவன் விரும்பிய அர்த்தம் காணவில்லை. அவள் தன் எல்லைகளை உணர்ந்து கொண்டபின், அந்த எல்லை களுக்குள் அவன் மனக்கனம் குறைவதற்காகச் செய்யும் வெறும் உபசரிப்பு.

வெளியில் மழை நின்று விட்டது. தெருவில் சிறுசிறு அருவிகள் தெளிவாக தெருவிளக்கில் பளபளத்து ஓடிக் கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/182&oldid=590840" இலிருந்து மீள்விக்கப்பட்டது