பக்கம்:பச்சைக்கனவு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சாவித்ரி

மணையில் சேர்ந்தாற்போல் பத்து நிமிஷம் சாவித்ரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேரத்திற்கு ஒரு முறை மாடிக்கும் கீழுக்குமாய் நடமாடிக்கொண் டிருந்தாள். கல்யாணத்தில் ஆயிரம் ஜோலி இருக்கையில், இந்தச் சாஸ்திரிகளுக்கு என்ன வேலை? சமையல்காரன் சாம்பாரை என்ன பண்ணிண்டிருக்கானோ தெரியவில்லை. (அண்டா ஈயம் போதாதென்று அவளுக்கு நினைப்பு) அப்புறம் அப்பளாத்தை இட்டு வைத்தால் ஆச்சா? பொரித்துப் போடவேண்டாமா? பந்தியில் எல்லாவற்றை யும் பரிமாறி விட்டு, அப்பளாத்தை எடு என்கிற வேளைக்கு அப்பளாத்தைத் தேடினால் என்ன பண்ணுகிறது? எல்லாவற்றையும் பண்ணிவிட்டுக் கடைசி யில் மூக்கை அறுக்கிறாப்போல் ஏதாவது நடந்துவிட்டால் என்ன பண்ணுகிறது: பிள்ளையாரே, கடைசி வரைக்கும் விக்கினம் வராமல் நீதான் காப்பாத்தவேணும், உனக்கு ஏழு சூறைத் தேங்காய் உடைக்கிறேன்

மாட்டுப்பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள். எல்லாம் ஆசையாத்தான் செய்கிறார்கள். ஆனால் எதுக்குப் பிரயோசனம் கொசுவம் வைத்து இன்னும் ஒரு வேளை சமயமானால் சரியாகக் கட்டிக்கொள்ளத் தெரியவில்லை. புலாபுலாவென்று ஏதோ கனகாரியமாக இருக்கிறது போல வளைய வருகிறார்களே தவிர, கைக்காரியத்தை மறந்துவிட்டு வந்தவர்களோடே பேசிச் சிரித்துக் கொண்டிருக்கத்தான் லாயக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/183&oldid=590841" இலிருந்து மீள்விக்கப்பட்டது