பக்கம்:பச்சைக்கனவு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி c. 175

இதோ கூடத்தில் பேராண்டி தொண்டையைக் கிழிச்சுண்டு கத்தறது காதைப் பொளிகிறது. அவனுக்குப் பசிவேளை வந்துவிட்டது. ஆனால் சிவகாமுவுக்கு மாத்திரம் ஏன் தெரியமாட்டேன் என்கிறது? ரெண்டு கண்ணுக்கு நாலு கண்ணாகக் கண்ணாடி வேறே போட்டுண்டிருக்கிறாளே!

*

'சிவகாமூ! ஏ. சிவகாமூ- ஊ...!

"இதோ பாருங்கோ, முகூர்த்த வேளை நெருங்கி விட்டது. நீங்கள் இது மாதிரியெல்லாம் எழுந்திருந்து எழுந்திருந்து நடுவில் போய்க்கொண்டிருக்கக்கூடாது' என்றார் சாஸ்திரிகள்.

"சரிதாங்காணும். நீங்கள் இட்டிலி காபி சாப்பிட்டே களா?'

'பார் சாவித்திரி மாமிக்கு உடம்பு படகுபோல் இருந்தாலும் பந்துபோலத்தான் ஓடி விளையாடுகிறாள்:

"என்ன இருந்தாலும் கல்யாணப் பெண் இல்லையா?" 'சிவகாமூ! ஏ சிவகாமூ- ஊ- ஊ:

பார்த்தீர்களா? பார்க்காவிட்டால் எல்லாரும் பார்த்துக்கொள்ளுங்கள். காது வரைக்கும் வாய் கிழியற கல்யாணப் பெண்ணை இந்தக் கல்யாணத்தில்தான் நீங்கள் எல்லாரும் பார்க்கலாம்.'

கொல்லென்று சுற்றும் ஒரு சிரிப்பு விஷ்ணுசக்கரம் போல் சுழன்று எழுந்தது. -

"சுந்தாதானே இப்போ பேசினது?"

'இதோ இருக்கிறேன், மாமி.”

"சுந்தாதான் இப்படிப் பேசுவாளென்று எனக்குத் தெரியுமே. என்னடி செளக்கியமா? பழைய குறும்பெல்லாம் இன்னும் போகவில்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/184&oldid=590842" இலிருந்து மீள்விக்கப்பட்டது