பக்கம்:பச்சைக்கனவு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 O லா. ச. ராமாமிருதம்

'கண்டேளோடி இந்த அதிசயத்தை மாமி மாமாவைப் பார்க்கிற பார்வையிலே பால் ஏடு மாதிரி அல்லவா தோய்ந்து விட்டாள்:”

சரிதான் போங்கோடி!' சாவித்ரி சீறி விழுந்தாள். 'வந்துவிட்டதடி மாமிக்குக் கோவம் வராது வராது என்றீர்களே! கை கொட்டல். கெக்கே' கொக்கரிப்பு. கேளிக்கை வாய்க்கு வாய் குறும்புப் பேச்சும், குதூகலக் சிரிப்பும் பந்தாடிக்கொண்டே கல்யாணக் கும்பலில் பரவின.

சாவித்ரியின் முகத்தில் கண்ணோரத்துச் சுருக்கங் களிலும் நெற்றிக் கோடுகளிலும் கன்னச் சதைக் கதுப்பு களிலும் சப்தமற்ற சிரிப்பு வந்தது.

சிறிசுகள் இப்படித்தான் இருக்கும். இதுகளுக்குச் சமயம், போது, சின்னவர் பெரியவர் வித்தியாசம் கிடையாது. அருமை பெருமை இல்லை. இவர்களுக்குச் சிரிச்சுண்டே இருக்கணும். சிரிக்க எது அகப்பட்டாலும் போதும். இன்னும் பத்து வருஷங்களாகட்டும். அப்போதும் இவர்கள் இப்படியேதான் இருப்பார்கள். இந்தக் காலத்துச் சிறிசுகள் அல்லவா? இவர்களோடே நம்மால் போட்டி போட முடியுமா?

'அம்மா!' என்றான் பஞ்சாமி, 'சாஸ்திரிகள் கூப்பிடுகிறார்.'

'இதோ போறேன்.”

"அம்மா, உன்னோடு ஒன்று சொல்ல வேணும். ஆனால் சொல்லாமலும் இருக்க முடியுமென்று முடிய வில்லை.”

அம்மா! பஞ்சாமிக்கு முகம் தக்காளியாய்த் தவித்தது. .

'அம்மா, என்ன சொல்ல வந்தேனென்றால் எங்கள் அப்பா அம்மா கல்யாணத்தை நாங்கள் பார்க்கும்படியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/187&oldid=590845" இலிருந்து மீள்விக்கப்பட்டது