பக்கம்:பச்சைக்கனவு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 179

நேரும் இந்தப் பாக்கியத்தை எப்படி உன்னிடம் தெரிவித்துக் கொள்வது?"

பஞ்சாமி வார்த்தைகளுக்குப் படும் அவஸ்தையைப் பார்க்கச் சாவித்ரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பஞ்சாமியின் சுபாவமும் அப்படித்தான். அவனுக்குத் தலையைச் சுற்றித் தான் மூக்கைத் தொட வரும். குழந்தைகள் எல்லாம் என்னவோ ஆசையாகத்தான் இந்த ஸ்ஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கும் இது ஒரு பெருமைதானே! வயிற்றுப் பிழைப்புக் காரணமாய் எங்கெங்கோ சிதறிவிடுகிறார்கள். அவரவர்களுக்குத் தம் தம் குடும்பம், குழந்தை குட்டி, கவலைகள். அதில் ஊரில் ஒதுங்கியிருக்கும் இந்தக் கிழங்களைப் பற்றியே எப்போதும் நினைப்பு இருக்குமா? அவர்களை நாமும் ரொம்ப கசக்கவும் வழியில்லை. ஏதோ இந்த சமயமாவது

அவர் என்னவோ, இதைப் பெரிதாய்க் கொண்டாட வேண்டாமென்றுதான் சொல்லிவிட்டார். "என்ன வேண்டிக் கிடக்கிறது? இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னவோ இருக்கிறவரைக்கும் இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போகிற இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டால் அதுவே போதும். நமக்கு இருக்கும் வாய்ப்புக்கு அதற்குமேல் என்ன?’ என்று அவர் எண்ணம்,

ஆனால் அவள் மனம் அப்படிக் கேட்குமா? ஏதோ இந்தச் சாந்தி பண்ணினால் பீடை தொலையாதா? ஆனால் இதைப்பற்றி அவரோடு தர்க்கம் பண்ணவும் முடியாது. ஒரு விஷயத்தைப் பற்றி மறு பேச்செடுத்தாலே அவர் முதல் பேச்சை மனத்தில் ஆணியாய் அறைந்து கொண்டு விடுவார். அவ்வளவு சந்தேகி. சுபாவத்திலே வீம்பு படைத்த மனுஷர். அதிலும் தடுத்துப் பேசினால் உடம்பு அதிர்ந்துவிடுமோ என்று பயந்து பயந்து தணிஞ்சுபோய், போக்குப்படி விட்டுவிட்டு, அதன் பலனாய், காரணம், காரியம், நியாயம் எல்லாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/188&oldid=590846" இலிருந்து மீள்விக்கப்பட்டது