பக்கம்:பச்சைக்கனவு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 0 லா. ச. ராமாமிருதம்

அற்றுப்போய் வெறும் பி டி வாதம் மாத்திரம் ஊறிப்போச்சு. அதனாலே இதைப்பற்றி அவரோட பேசப்போய் முன்கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால் அதையெல்லாம் தாங்குற வயசோ தெம்போ அவளுக்கு இல்லை. .

ஆகையினாலே ஒரு நாள் மத்தியான்னம், அவர் மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில், பக்கத்தாத்துப் பிள்ளையைக் கூப்பிட்டு, ஒரு முக்காலணாக் கடிதாகை அவனிடம் கொடுத்துப் பஞ்சாமிக்கு எழுதச் சொன்னாள்,

'நான் சொன்னதாக அப்பாவிடம் சொல்லாதே. உங்கள் அப்பாவுக்குத் தெரியாமல் நான் செய்யும் காரியம் இது ஒன்றுதான்,' அதைச் சொல்லுகையிலேயே அவளுக்கு அழுகை வந்துவிட்டது. நானுப்பயல் சமர்த்து. பாட்டி யைக் கவனிக்காததுபோல், வாசற்புறம் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஆனால் எனக்காக இல்லை. அவருக்காகத்தான். இந்தத் தள்ளாமையில், நாங்கள் உங்களில் யாரோடாவது தான் இருக்கணும். அதென்னவோ எங்களுக்கும் கொடுத்து வைக்கவில்லை. உங்களுக்கும் கொடுத்து வைக்கவில்லை. அவர் உடம்புக்கு வேண்டிய நிம்மதியும் காற்றோட்டமும் பட்டணத்து சந்தடியில் நாங்கள் எங்கே காணமுடியும்? எனக்கு அமிழ்ந்து ஸ் நான ம் பண்ண அகண்ட காவேரிக்கும், காலையிலும் மாலையிலும் தரிசனம் பண்ண அகிலாண்டேசுவரிக்கும் நான் எங்கே போவேன்? அதனாலே, நாங்கள் இருக்கும் இடமே எங்களுக்கு சுகம் என்றாலும், இந்தச் சமயத்தில் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து இருக்கையிலேயே

'இல்லை. ஒருவேளை நீயாவே, நான் இதை உன்னிடம் பிரஸ்தாபப்படுத்துவதற்கு முன்னாலேயே, எடுத்துச் செய்வதாக இருக்கலாம். ஆனால் என் அவசரம் எனக்குத் தாங்கவில்லை. அதனாலேயே நீயும் உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/189&oldid=590847" இலிருந்து மீள்விக்கப்பட்டது