பக்கம்:பச்சைக்கனவு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 181

தம்பிமாரும் கலந்து ஆலோசனை பண்ணி, இந்த வைதிகக் காரியத்தை எப்படி நடத்தனுமோ, எப்படி அப்பாவை இதற்கு இணங்கப் பண்ணனுமோ அப்படிச் செய் யுங்கோ.'

எழுதினவுடனேயே பஞ்சமி உற்சாகமடைந்துவிட் டான். ஆனால் அப்த பூர்த்தியைப் பட்டணத்தில்தான் நடத்த வேண்டுமென்று பிள்ளைகள் ஒரே பிடியாய்ப் பிடித்தார்கள். ஏனெனில், பட்டணத்தில்தான் ஒரு நிமிஷ: எச்சரிக்கையில் உப்பிலிருந்து கர்ப்பூரம்வரை எல்லாச் சாமானும் வீட்டு வாசற்படியண்டை கிட்டும். பட்டணத் தில்தான் நண்பர்கள் நிறைய வரமுடியும். பட்டணத்தில் தான் வேண்டியவர், வேண்டாதவர் எல்லோருமே இருக் கிறார்கள்.

'அவர்களுக்கு என்னடி குறைச்சல்? யானை மாதிரி ஜாம் ஜாமென்று தாங்குகிறதற்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்' என்று வயிறு குளிர்ந்து வாயார வாழ்த்துபவர்களைக் கேட்கப் பெருமையாக இருக்கிறது. உதட்டு நுனியில் அப்படிச் சொல்லிக்கொண்டு, வாழச் சகிக்காதவர்கள் உள்ளுறப்படும் வயிற்றெரிச்சலை உணரு வதில் அதைவிட இன்பம் இருக்கிறது. அதற்காகவாவது, இந்த சமயத்தை விமரிசையாகக் கெண்டாட மூன்று பேர் களும் முஸ்தீப்பானார்கள். அவளுக்கே தன் பிள்ளை களைப்பற்றி இப்படித் தோன்றுகிறது நன்றாக இல்லை யானாலும், அவள் பிள்ளைகளை அவளைவிட வேறு யார் நன்றாக அறியமுடியும்? மூனும் மூணு தினுசு:மூனும் முரடு. ஒண்னுக்கொண்னு ஒத்துக்கொள்ளாது. அதுவும் கல்யாணம் ஆனதுமே ஒவ்வொருத்தனும் மூலைக் கொண்ணா பிய்ச்சுண் டதை நினைச்சால இப்போக்கூடச் சிரிப்பு வருகிறது. இதற்குப் பானை பிடிக்க வந்தவள் மேலே பழியைப் போடுகிறதா? இல்லாவிட்டால் பிள்ளை களுக்கு ஏற்கனவே இருக்கும் சவரணை அவளுக்கு தெரியாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/190&oldid=590848" இலிருந்து மீள்விக்கப்பட்டது