பக்கம்:பச்சைக்கனவு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 O லா. ச. ராமாமிருதம்

வெச்சிருந்தால், அந்த முகூர்த்தத்தைப் பார்க்க எனக்கு மாத்திரம் கொடுப்பனை இருக்காதா என்ன?”

'பாட்டி, எல்லாம் உங்கள் ஆசீர்வாதம், முன்னால் அவர்களுக்குச் சதாபிஷேகம் பண்ண எங்களுக்குக் கொடுத்து வைக்க வேணுமே, அதைச் சொல்லுங்கள்." இப்போது இவ்வளவு பதவிசாய்ப் பேசும் சிவராஜன், ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னால் அவளிடம் சொன்ன வார்த்தைகள் திடீரென நினைவின் பின்னணியிலிருந்து அசரீரி மாதிரி எழுந்ததும் சாவித்ரி தன்னை அறியாமல் களுக்கெனச் சிரித்துவிட்டாள்.

'என்னம்மா சிரிக்கிறாய்?' என்றான் சிவராஜன், சற்றுத் திகைப்புடன்.

'ஒண்ணும் இல்லை, சீவாச்சு! என்னவோ நினைப்பு வந்தது.”

அப்போது சிவராஜனுக்குக் கல்யாணமான புதிது. இளந்தம்பதிகளைப் புதுக் குடித்தனம் வைக்க அவள் கிராமத்திலிருந்து பெங்களுருக்குப் போயிருந்தாள் அங்கு ஒரு பத்து நாள் தங்கும்படி நேர்ந்தது. புது நாட்டுப் பெண்ணை நம்மகத்துக் காரியத்துக்குப் பழக்கி வைக்க வேண்டாமா?

அந்த சமயம் ஒரு நாள் நாட்டுப்பெண் தோசைக்கு அரைத்துவைத்த மாவை சரியாய் மூடவில்லை. மாவு அசிங்கமாய் வெளியில் பொங்கி வழிந்திருந்தது. அதற்கே முனகிக்கொண்டு சாவித்ரி மாவைக் கிளறுகையில், ஒரு செத்த பல்லி விறைத்த வாலுடன் நடு மாவிலிருந்து கிளம்பிற்று. சாவித்திரிக்கு அருவருப்பின் பயங்கரத்தில் உடம்பெல்லாம் புல்லரித்தது.

"ராஜம்!" *ராஜம்!” 'இருங்கோ அம்மா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/193&oldid=590851" இலிருந்து மீள்விக்கப்பட்டது