பக்கம்:பச்சைக்கனவு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 185

ராஜம் கண்ணாடிக்கு எதிரில் வெகு காரியமாக இருந்தாள். கொண்டைமேல் மல்லிகைச்சரம் வளைவாய்ப் பதியவில்லை. காதோரம் ஒரு மயிரை எஃகுச் சுருளாக்க முயன்று கொண்டிருந்தாள். ராஜிக்கு மிகவும் நெஞ்சீரல். கண்ணாடியில் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சரியண்ண முயன்றுகொண்டிருந்தாள்.

ராஜம், அலங்காரம் அப்புறம் பண்ணிக் கொள்ளலாம். உடனே வா, இங்கே!'

கனவு கடுமையாய்க் கலைந்த விழிகளுடன் ராஜி வந்தாள். அப்போதே, தாழ்வாரத்து வாசல் வழி சிவராஜன் சமையலறையில் நுழைவதற்கும் சரியாக இருந்தது. அம்மா முகத்தின் கடுகடுப்பையும் ராஜியின் முகத்திகைப்பையும் மாறி மாறிப் பார்க்கையில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

என்ன அம்மா?’’

அம்மாவையும் பிள்ளையையும் சேர்ந்தாற்போல் கண்டதும் ராஜியின் நெற்றியும் கன்னங்களும் கழுத்தும் சிவப்பு லாந்தரைத் துாக்கிப் பிடித்தாற்போல் குங்குமமாய்ச் சிவந்தன. ராஜத்தின் மேனி ஏற்கெனவே நல்ல சிவப்பு. வெறும் வெளிறிட்ட சிவப்பல்ல; அழகுச் சிவப்பு, பழுத்த தெற்கதிர்களின்மேல் படும் பொன் வெயிலின் தகதகக்கும் சிவப்பு.

"என்ன ராஜம்?

சிறைப்பட்ட பறவையின் சிறகுகள்போல் ராஜத்தின் கண் இமைகள் படபடவென்று அடித்துக் கொண்டன. கனவு கலைந்த விழிகளிலிருந்து அந்தக் கனவே உருகிக் கனந்தாங்காது விழியோரங்களிலிருந்து வழிந்து அவள் கணவன் இதயத்துள் சொட்டி விழுந்து, விழுந்த இடங்களை தஹித்தன. சிவராஜனுக்கு உடல் பரபரத்தது.

"ராஜம், மாடிக்கு வா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/194&oldid=590852" இலிருந்து மீள்விக்கப்பட்டது