பக்கம்:பச்சைக்கனவு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 0 லா. ச. ராமாமிருதம்

சற்று நேரம் அல்லது எத்தனை நேரமோ கழித்துச் சிவராஜன் கீழே இறங்கி வருகையில், அவனுக்குச் சமையல் அறையில் நேர்ந்த சம்பவமே மறந்துவிட்டது. உள்நாக்குத் தெரிய வாயைத் திறந்து சிரித்துக் கொண்டே கீழிறங்கி வந்தான். ராஜி ஏதோ அவ்வளவு வேடிக்கையாய்ப் பேசி யிருந்தாள். ஆகையால் அந்தச் சமயத்தில் கொடிப் புடவையை இழுத்து மடித்து அம்மா பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவனுக்குத் 'திக் கென்றது.

என்னம்மா?'

அம்மா அவனைப் பார்க்கவில்லை. தன் காரியத்தில் முனைந்தபடியே, 'ஊருக்குப் போகப் போறேன், இன்னி ராத்திரி வண்டிக்கு' என்றாள்.

'ஏன் அம்மா?’’

'இப்போத்தான் நினைப்பு வந்தது- அம்மா பெட்டி மூடியை முழங்காலால் அழுத்தித் தாழ்ப்பாளை வெற்றியுடன் போட்டாள்: " மந்தையிலிருந்து வந்த மாட்டை தறியில் கட்ட மறந்துட்டேன். அது மல்லிகைச் செடியை என்ன பண்ணிருக்கோ!'

சிவராஜனுக்குத் திகைப்பு இன்னும் அதிகரித்தது.

'என்ன அம்மா, பத்துநாள் கழித்து இப்போது நினைப்பு வந்தால்?"

சாவித்திரி வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். அட அசடே, ஊருக்குப் போறதுக்கு அது ஒரு சாக்குடா. மாட்டை கட்டாமல் விடுவேனாடா வா வா, கிளம்பு; என்னை ரெயிலேத்தி விட்டுவிடு. இன்னும் பதினஞ்சு நிமிஷம்தான் இருக்கு ஊஹாம். சாப்பிட நேரமில்லை. போற வழியிலே இரண்டு வாழைப்பழத்தை உரிச்சுப் போட்டுண்டாப் போறது. விடிஞ்சால் காபிக்கு ‘டான்"னு ஊர்-’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/197&oldid=590855" இலிருந்து மீள்விக்கப்பட்டது