பக்கம்:பச்சைக்கனவு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 189

என்ன தடுத்தும் அவள் கேட்கவில்லை. ரெயிலில் ஏறி. உட்கார்ந்த பிறகு சிவராஜனுக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. குரலில் கண்ணிர் மல்க, நான் ஏதாவது பதட்டமாகப் பேசியிருந்தாலும் நீ பாராட்டாதே, அம்மா!' என்றான்.

'அட போடா அசடே! உன்னோடே எனக்கு என்னடா கோபம்? உண்மையிலேயே அவளுக்கு அப்போது கோபம் இல்லை. 'நான் அப்பாவைத் தனியே விட்டுவிட்டு இங்கேயே உட்காந்துண்டிருக்க முடியுமா?’’

ரெயில் நகர ஆரம்பித்துவிட்டது. 'உடம்பை ஜாக்கிரதையாய் பார்த்துக்கொ. ராஜியை வெள்ளிக் கிழமை மறக்காமல் எண்ணெய் தேய்ச்சுக்கச் சொல்லு-'

இரு மருங்கிலும் சுழன்று ஒடும் வயற்புறங்களிலிருந்து காற்று சில்லென்று முகத்தின் மேல் மோதுகையில் உண்மை யிலேயே சாவித்ரிக்கு ஏதோ அடைப்பிலிருந்து விடுதலை யானாற் போலிருந்தது.

அப்போதிலிருந்தே பிள்ளைகளிடம் தங்கி வாழும் சபலத்தை, எண்ணத்தையே சாவித்ரி விடுத்தாள். ஒரு அநுபவமே போதும், ஒவ்வொரு பிள்ளையிடமாகப் போய் ஒவ்வொரு பரீrையாய்ப் பட மனம் மறுத்துவிடடது.

ஆனால், தெரிந்தோ தெரியாமலோ சிவராஜன் ஒரு விஷயத்தில் உண்மையைத்தான் சொன்னான். அவர்கள் சிறியவர்கள். அவர்களின் காலமும் வழிகளுமே வேறு. இந்தக் காலத்துடன் ஒத்துப்போய் அவர்களை ஒடிப் பிடிப்பது என்பது இ ய ல | த காரியம், அதனால் வயசானவர்கள் நாம் மூச்சுத் திணறி மார்பு வெடிக்காமல் இருக்கவேனுமானால் பின் தங்கி விடுவதுதான் நல்லது. நாம் எப்படியும் பின் தங்கித்தான் விடுவோம். நமக்கு மிஞ்சுகிறது நம் தனிமைதான். நம் தனிமை மாத்திரம் அல்ல, நாம் எந்த வழி வந்தோமோ அந்த வழியினுடைய தனிமையேதான். நாம் எந்த வழி வந்தோமோ அந்த வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/198&oldid=590856" இலிருந்து மீள்விக்கப்பட்டது