பக்கம்:பச்சைக்கனவு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 0 லா ச. ராமாமிருதம்

வந்து நம்முடைய ஸ்காப்தத்தின் முடிவை அடைந்து விட்டோம். அதை அடைந்தபின் அதை விட்டுத் தப்பியோட முடியுமா? அதுதான் நம்மை விடுமா? நம்முடைய நிலைக்கு அதை ஏற்பதுதான் நல்லது.

இதோ இன்னொரு பிள்ளையை ஊருக்கு வழி அனுப்பி விட்டு வாசற்படியில் நிற்கையில் இந்தத் தனிப்பட்ட தனிமையை திக்கற்ற தனிமையைச் சாவித்திரி நடுமுதுகு சில்லிடச் சட்டென உணர்ந்தாள். இனி எப்பவோ? மறுபடியும் பார்க்கற போதுதான். பார்த்தவரைக்கும் லாபம், செல்லப்பாவுக்கு ராணுவத்தில், அதுவும் விமான நிலையத்தில் வேலை. யார் போனாலும் போகாவிட்டா லும் அவன் கண்டிப்பாய்ப் போயே தீரவேண்டும். ஆகையால் அவன் போய்விட்டான்.

சிவராஜன் மத்தியான வண்டிக்கே கிளம்பிவிட்டான். நேரே உத்தியோகத்துக்குப் போவதாய்ச் சொன்னாலும் அவன் அங்கே போகவில்லை என்று அவளுக்குத் தெரியும். போகும் வழியில் மாமனார் வீட்டில் இறங்கி ஒரு வாரமாவது "டேரா போட்டுவிட்டுத்தான் போவான்.

சிவராஜனுக்கு இன்னும் சந்ததி உண்டாகவில்லை. கல்யாணமாகி ஐந்தாறு வருஷங்களுக்கு மேலாகிவிட்டன. ராஜி ஏதோ ஒரு தினுசில் அவன் உயிர் நாடியையே பற்றியிருந்தாள். இந்த ஐந்தாறு வருஷங்களுக்குள் சிவராஜனுக்கு முன் மயிரிலும் பக்கவாட்டிலும் அலை துரை போல் அடையாய் நரை ஒடியிருந்தது. கால வடுக்கள் தனித்தனியாய்த் தம் தம் இடங்களை முகத்தில் செதுக்கிக் கொண்டிருந்தன. பெற்ற வயிறு என்றதனாலோ என்னவோ, சிவராஜனுக்கு வருடங்களின் மூப்பு ஏற ஏற ராஜந்தான் அவன் இளமையை வாங்கிக் கொண்டு ப்ரகாசிப்பது போல் சாவித்ரிக்குத் தோன்றிற்று. இப்போது கூடத்தான் வந்திருந்தாளே, ராஜம் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்தான் இருந்தாள். ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/199&oldid=590857" இலிருந்து மீள்விக்கப்பட்டது