பக்கம்:பச்சைக்கனவு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 191

பருமனோ, இளைப்போ, நிறக் குறைவோ, கூந்தலில் குட்டையோ ஊஹாம்! அந்தச் சிவப்புத்தான் என்ன சிவப்போ! எச்சில் முழுங்கினால் அது நெஞ்சுக்குள் இறங்கறது தெரியும்.

இன்னும் இரண்டு நாள் குழந்தைகளோடு சேர்ந்து இருந்து பழைய நாட்கள் போல் தன் கையாலேயே அவர்களுக்குச் சமைத்துப் போட்டு அவர்கள், பேஷ் பேஷ்! அம்மாதான் சாப்பிடாவிட்டாலும் வெங்காய சாம்பார் எவ்வளவு ஜோராய்ப் பண்ணுகிறாள்!” என்று நாக்கைக் கொட்டிக் கொண்டு தொண்டை வரையில் வாயுள் கையை விட்டுக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து மகிழவேண்டுமென்றுதான் அவளுக்கு ஆசை. ஆனால் எது கேட்கிறது? திக்குக்கு ஒன்றாய் அது அது புறப்பட்டுக் கொண்டிருக்கிறதே! பெற்ற நாலும் நாலு

திடீரென்று சாவித்ரிக்குக் கண்கள் இருண்டன. தலை "கிர்’ரிட்டது. வாசற்கதவின் கம்பிகளைப் பிடித்தபடி சரிந்தாற்போல் வாசல் படிக்கட்டின்மேல் உட்கார்ந்தாள். இருள் வளையங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாய்ப் புறப்பட்டு ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டு அவளை வளைத்துப் பின்னிக் கொண்டன. கருமேகங்கள் திடீரெனப் பந்து பந்தாய்க் கக்கிக் கொண்டு வந்து அவள் மேல் கவிந்தன.

'நொய்ங்- ங்... ங்ங்ங்’

குளவியின் ரீங்காரம்போல் எஃகுத் தந்தி நாதத்தினும் ஸ்ன்னமான ஒரு சப்தம் அந்த இருள் பந்துகளிலிருந்து கிளம்பி மடமடவென வீங்கிச் சமுத்ரகோஷமாய்க் காதண்டை இரைந்தது. அந்தப் பேரிரைச்சலிலிருந்து இரு சப்தங்கள் மாத்திரம் பிரிந்து வந்து மோதின.

"ஜம்பூ ஜம்பூ!'

'அம்மா! அம்மா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/200&oldid=590858" இலிருந்து மீள்விக்கப்பட்டது