பக்கம்:பச்சைக்கனவு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 C லா. ச. ராமாமிருதம்

சாவித்ரி இரு செவிகளையும் பொத்திக் கண்ணை இறுக முடிக்கொண்டாள். இமைத் திரையில் ஒரே ஜனப்ரளயம் பெருகிற்று, மயிலாப்பூர் அறுபத்துமூவர் உற்சவம், மாட வீதித் திருப்பத்தில் நெரிந்த கூட்டத்தில் அவளும் ஜம்புவும் அகப்பட்டுக் கொண்டு விட்டனர். அலை மாதிரி இன்னொரு பெரும் ஜனத்திரள் அவர்கள் மேல் மோதிற்று. அவள் பிடியிலிருந்து குழந்தையின் கைப்பிடி பிய்த்துக் கொண்டு பிரிந்து போய்க்கொண்டே யிருக்கும் அவஸ்தையை அவள் அப்போது அநுபவித்துக் கொண்டிருந்தாள்.

"ஐயோ, என் குழந்தை!-' 'அம்மா! அம்-'

இன்னொரு ஜன அலை வெகு வேகமாய்ப் புரண்டு வந்து ஜம்புவை அடித்துக்கொண்டு போய்விட்டது. குழந்தை முகங்கூடக் கான முடியவில்லை. அதற்குள் பல்லாயிரம் தலைகள் இடைமடுத்து விட்டன.

ஜம்பூ- ஊ- ஊ'

திடீரென இமைத்திரையின் படம் சட்டென அறுந்து திரை பளிச்சிட்டது. ஜனசமுத்ரத்தின் கோஷம் சட்டென ஓய்ந்தது.

சாவித்ரி மெதுவாய்க் கண்களைத் திறந்தாள். முகத்தில் ஸ்நானமாய்க் கொட்டியிருந்த வேர்வையை முன்றானையால் துடைத்துக் கொண்டாள். வெகு துாரத்தி லிருந்து ஓடி வந்தாற்போல் மூச்சு இரைத்தது. பிரிந்து வந்து நெற்றிப்பொட்டில் காற்றாடும் இரண்டு மயிரைக் காதோரம் அடக்கினாள்.

தெருவில் ஒருவரும் இல்லை. வாசல் லாந்தர் கம்பம் மாத்திரம் தன்னடக்கமான வெளிச்சத்தைத் தெருவில் தெளித்துக்கொண்டு, அவள் சுமார் முப்பத்தைந்து வருஷங் களுக்கு முன்னால் நேர்ந்த நனவை இப்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/201&oldid=590859" இலிருந்து மீள்விக்கப்பட்டது